Recipe Name: பப்பு ரொட்ட
Recipe by: Praveena Durairaj
Ingredients:
கடுகு, உ. பருப்பு, க. பருப்பு, முந்திரி, கா. மிளகாய், உப்பு, தேங்காய், கருவேப்பிலை, பால், சர்க்கரை, ஏலக்காய்
Procedure:
தோசை செய்முறை:
புழுங்கல் அரிசி- 150கிராம்
பச்சரிசி- 150கிராம்
உப்பு(தேவையான அளவு)
ஊற வைத்து அரைத்து எடுத்து கொள்ளவும். அதன்பிறகு கொஞ்சம் மாவை எடுத்து தனியாக கரைத்து கஞ்சி காய்த்து மாவில் ஊற்றி தோசை வார்க்கவும், பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பருப்பு பப்பு ரொட்ட செய்முறை:
ஒரு வாணலியில் நெய் காயவைத்து அதில் கடுகு, உ. பருப்பு, முந்திரி, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும், பிறகு வேக வைத்த பருப்பு ஊற்றி கொஞ்சம் உப்பு, ம. தூள், தேங்காய் சேர்த்து கொஞ்சம் தண்ணியாக இருக்கும்பொழுது அனைத்து விட்டு தோசை துண்டுகளைப் போட்டு கலக்கி சுட சுட பரிமாறவும்.
புலுவு பப்பு ரொட்ட செய்முறை:
வெறும் வாணலியில் கடுகு, வெந்தயம் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ந. எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கா. மிளகாய்(10), க. பருப்பு, கருவேப்பிலை தாளித்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு, ம. தூள், சிறிது வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கெட்டியானவுடன் நிறுத்தி விட்டு, வறுத்த பொடியைப் சேர்த்து இறக்கியப் பின் தோசை துண்டுகளில் இந்தக் கலவையை சேர்த்து நான்றாக கிளறினால் புலுவு பப்பு ரொட்ட சித்தமயிந்தி.
தீவு பப்பு ரொட்ட செய்முறை:
பாலை நன்றாக சுண்ட காய்த்து சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் சேர்த்து ஆறியவுடன் தோசைத் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
Total Votes: 62
Total Views: 903