Recipe Name: மரவள்ளிக் கிழங்கு புட்டு
Recipe by: Padmavathi Vengataraman
Ingredients:
மரவள்ளிக் கிழங்கு 1, துருவிய வெல்லம் 1/4 கப் துருவிய தேங்காய் 1/2 கப்
Procedure:
*மரவள்ளிக் கிழங்கு புட்டு*
மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து முக்கால் பதமாக வேகவைத்து, சூடு ஆறியதும் தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
தேங்காய், வெல்லம் இரண்டையும் தனித்தனியே துருவி வைத்துக்கொள்ளவும்.
புட்டு மேக்கரில் சிறிது தேங்காய், வெல்லம், மரவள்ளிக் கிழங்கு என அடுக்கடுக்காக போட்டு 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்து சுடச்சுட பரிமாறவும்..
சுவையான
ஆரோக்கியமான
மரவள்ளிக் கிழங்கு புட்டு தயார்..
Total Votes: 122
Total Views: 945