
Recipe Name: நீர் உண்டை உப்பு உருண்டை வெல்லம் உருண்டை சைடிஸ் தேங்காய் துவையல்
Recipe by: V. Banumathi
Ingredients:
புழுங்கல் அரிசி அரை கிலோ, முழு தேங்காய் ஒன்று, நாட்டுச்சக்கரை, ஏலக்காய், உப்பு
Procedure:
செய்முறை முதலில் புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும் தேங்காயை துருவிக் கொள்ள வேண்டும் பிறகு ஊறிய அரிசியை மிக்ஸியில் போட்டு தேங்காயுடன் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும் இதில் உப்பு சேர்க்காமல் இனிப்பு உருண்டை செய்வதற்கு சிறிது மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் மீதி மாவில் உப்பு போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும் அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும் பிறகு உப்பு போட்டு வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து கொதிக்கும் தண்ணீரில் ஒன்று ஒன்றாக போடவேண்டும் உருண்டை வெந்து மேலே வரும் அதை அடிப்பிடிக்காமல் கிளறி விடவேண்டும் என்ற உடன் இறக்கி விட வேண்டும் நீர் உருண்டை ரெடி அடுத்து ஒரு பாத்திரத்தில் நாட்டுச்சக்கரை போட்டு 200 கிராம் தண்ணீர் ஊற்றி விட வேண்டும் நன்கு கரைந்தவுடன் உப்பு போடாத மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி வெல்லக் கரைசலில் போட்டு நன்றாக வெந்தவுடன் இறக்கி விடவும் சிறிது ஏலக்காய் சேர்க்க வேண்டும் வெள்ளை உருண்டை ரெடி இது பழைய காலத்து பாட்டி சொன்ன பாரம்பரியமிக்க நீர் உருண்டை இதற்கு தேங்காய் துவையல் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இதற்கு காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு போட்டு வறுத்து அதனுடன் தேங்காய் புளி உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்க வேண்டும் இந்த உருண்டை மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.
Total Votes: 145
Total Views: 1528




