Recipe Name: சோளகாயலு
Recipe by: V. Kowsalya Gopinath
Ingredients:
தேவையான பொருட்கள்:* கடலைப்பருப்பு - 1/2 கப், பாசிப்பருப்பு - 1/2 கப், உளுத்தம்பருப்பு - 1/4 கப், துவரம் பருப்பு - 1/4 கப், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் - 1கப், துருவிய தேங்காய் சிறிதளவு, தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் வெங்காயம்.
Procedure:
*செய்முறை*
*பருப்புக் கலவைக்கு*
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு இவை அனைத்தையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும் பின்பு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு உப்பு போட்டு நன்கு கிளறி 6 மணி நேரம் புளிக்க விடவும். அதன்பின்பு ஒரு வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து அரைத்த மாவில் கொட்டவும் மற்றும் தேங்காயும் சேர்த்துக்கொள்ளவும். பிறகு மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
*அரிசி மாவு கலவைக்கு:*
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விட்டு கொதிக்கும்போதே 2 ஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரிசி மாவை கொட்டி ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கவும். சூடு ஆறிய பிறகு அரிசி மாவு கலவையை நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு அரிசி மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தொன்னை போல் செய்து கொள்ளவும். பிறகு பருப்பு கலவையை சிறிய சிறிய உருண்டையாக செய்து அந்த தொன்னைக்குள் வைத்து மூடிக்கொள்ளவும். அந்த தொன்னையை இட்லி தட்டில் ஆவியில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். இப்பொழுது காரமான, சுவையான சோளகாயலு ரெடி.
Total Votes: 92
Total Views: 1162