Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: வெதுரு பிய்யம்பிண்டி ,சேனை உப்புமா
Recipe by: Gayathri. R
Ingredients:
"வெதுரு பிய்யம்பிண்டி ,சேனை உப்புமா" தேவை: மூங்கில் அரிசி மாவு-1கப் வேக வைத்து மசித்த சேனை-3/4கப் நறுக்கிய வெங்காயம்-1/4கப் நறுக்கிய தக்காளி-1/4கப் நறுக்கிய ப.மிளகாய் -1ஸ்பூன் ம.தூள்-1/4ஸ்பூன் மி.தூள்-1ஸ்பூன் பெ.காயத்தூள்-1/4 ஸ்பூன் புளித்தண்ணிர்-11/2கப் தாளிக்க: கடுகு உ.பருப்பு க.பருப்பு கறிவேப்பிலை உப்பு & எண்ணெய் -தேவேவையானது
Procedure:
செய்முறை: மூங்கில் அ.மாவு செய்முறை : மூங்கில் அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து ,களைந்து நிழலில் ஈரப்பதம் போக காயவைக்கவும். அரிசியை மிக்ஸியில் நைஸாக அரைத்து ,சலித்து, வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும் . புட்டு,தோசை,இட்லி,பிடிச்சலு ,முறுக்கு என அனைத்தும் நினைத்த நேரத்தில் சுவையான,ஆரோக்கியமான உணவை செய்யலாம். இப்பொழுது "வெதுரு பிய்யம்பிண்டி,சேனை உப்புமா" எப்படி செய்வது என பார்ப்போம். ஒரு பாத்திரத்தில் மசித்த சேனையுடன் சிறிது உப்பு,புளித்தண்ணீர்,மி.தூள் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு எடுத்து கொள்ளவும். வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு,தாளிதம் பொருட்களை தாளித்து ,வெங்காயம் ,தக்காளி சேர்த்து வதக்கவும் . 21/2கப் தண்ணீர் விட்டு,ம.தூள் ,உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும் பொழுது அடுப்பை ஸிம்மில் வைத்து ,சேனை கலவையை விட்டு நன்கு கலக்கவும். கெட்டியாக வரும்போது 2நி மூடி வைக்கவும். மீண்டும் திறந்து நன்கு கிளறிவிட்டு ,அடுப்பை அணைத்துவிட்டு மீண்டும் மூடி வைத்து ,அதன் மேல் சிறிது கனமான கல்லை(குண்டு ராய்) 5 நி வைக்கவும். இப்பொழுதுதான் சுவையான,வாசனையான,ஆரோக்கியமான, வெதுரு பிய்யம்பிண்டி,சேனை உப்புமா" ரெடி. இதற்கு தொட்டு கொள்ள ஊட்ட சாமான்லு நன்றாக இருக்கும். காயத்ரி,திருவண்ணாமலை .
Total Votes: 11

Total Views: 619