Recipe Name: பச்சிபிண்டி கெவ்வலு பலகாரம் புளிப்பு - பருப்பு - இனிப்பு
Recipe by: Lalitha Maheswari Raja Sekaran
Ingredients:
தேவையான பொருட்கள் : அரிசி மாவு 1 கப், பால்1/2கப், தண்ணீர்1கப், ஒரு சிட்டிகை உப்பு, 2ஸ்பூன் நெய்
Procedure:
1. பச்சரிசி மாவு 1 கப், பால்1/2கப், தண்ணீர் 1 கப், உப்பு 1 சிட்டிகை எல்லாம் கலந்து பின்னர் அடுப்பில் வைத்து 10 நிமிடம் கிளறவும்.இறக்கி வைத்து10 நிமிடம் கழித்து குட்டி குட்டி உருண்டை செய்துமடக்கவும்.பின்பு குக்கரில் 10 நிமிடம் இட்லியைபோல வேகவைக்கவும்.
2. பருப்புதாளிப்பு :
துவரம்பருப்பு சிறிது வேகவைக்கவும்.ஒருவட சட்டியில் கடுகு, சீரகம், வர மிளகாய், உ பருப்பு, பெ. காயம்
கறிவேப்பிலை தாளித்து துவரம் பருப்பை சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி அதில் வேக வைத்த கெவ்வலு போட்டுகிளறி இறக்கவும்.
3. புளிப்பு தாளிப்பு :
ஒரு வட சட்டியில் கடுகு தாளித்து, உ. பருப்பு, க. பருப்பு, வரமிளகாய் தாளித்து புளி கரைசல் உப்பு வெல்லம் சேர்த்து கறிவேப்பிலை, ம தூள் வறுத்த எள் தூள்,சேர்த்து சுண்ட வைத்து
அதில் கெவ்வலு சேர்த்து பிரட்டி இறக்கவும்.
4. இனிப்பு :
முந்திரிபருப்பு 20, 8 ஸ்பூன் சக்கரை, 2 ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து இந்த கெவ்வலு மேல் தூவவும்
1/2மூடி தேங்காய், 2 ஸ்பூன் பால் சேர்த்து அரைத்து அதில் கொட்டிகிளறி வைக்கவும்.
குறிப்பு :
விடுமுறை நாட்களில் இதை செய்தால் குழந்தைகளும் நம்முடன் சேர்ந்து அழகாக உருட்டி மடக்கி தருவார்கள்.இதனால் நம் பாரம்பரிய உணவுவகைகளை தெரிந்து கொள்வார்கள். நம் அம்மா நமக்காக எவ்வளவு பாசத்தோடு செய்கிறார்கள் என்று புரிந்தும் கொள்வார்கள்.
Total Votes: 244
Total Views: 4769