Recipe Name: பாரம்பரிய ராகி களி & ராகி கூழ்
Recipe by: M.Priya
Ingredients:
ராகிமாவு-250 கிராம்,தண்ணீர்,சின்ன வெங்காயம்,மாங்காய்,உப்பு-தேவையான அளவு
Procedure:
🌷ராகி களி🌷
ராகி மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும். பின்பு அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.தண்ணீர் கொதித்த பின் அதில் கரைத்த மாவை ஊற்றி அடிப்பிடிக்காமல் நன்றாக கிளறி கொண்டு இருக்க வேண்டும். பின்பு கெட்டியான பதத்திற்கு வந்த உடன் அடுப்பை அணைத்துவிடவும். ஆரோக்கியமான பாரம்பரிய ராகி களி ரெடி......
🌷ராகி கூழ்🌷
ராகி களியில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்ந்து நன்றாக கரைத்து விட வேண்டும்.பின்பு அதில் சின்ன வெங்காயம் மாங்காய் துண்டுகளை சேர்த்தால் ராகி கூழ் ரெடி....
கோடைகாலத்திற்கு ஏற்ற குளுமையான உணவு.....
Total Votes: 39
Total Views: 1028