Recipe Name: Kancheepuram Idly and Kovil Dosa
Recipe by: A K Kalpana
Ingredients:
பச்சை அரிசி (200) கிராம் அளவு -11/4 கப், உளுந்து-1கப் வெந்தயம்-1டீஸ்பூன் புளிக்காத தயிர்-1கப் மிளகு , சீரகம் -1+1டீஸ்பூன் பெருங்காயம் -1/4டீஸ்பூன்,சுக்கு2 அங்குலம் துண்டு நெய் ஒரு சட்னி ஸ்பூன் +எண்ணெய் ஒரு சட்னி ஸ்பூன் உப்பு தேவையான அளவு. வெங்காயம்-3 மிளகாய் -6&8 பூண்டு-6 பெருங்காயம் சிறிதளவு கருவேப்பிலை இளசாக இருப்பது சிறிதளவு உப்பு +புளி+வெல்லம் தேவைக்கு ஏற்ப.
Procedure:
முதலில் வெந்தயம் 5&6மணிநேரம் நன்றாக ஊற வேண்டும்.அரிசி கழுவி நீரை வடிகட்டி உடனே ஒரு துணியில் காயவைக்க வேண்டும். உளுந்து 2&3மணிநேரம் ஊறினால் போதுமானது.முதலில் காயவைத்த அரிசையை பெரிய ரவைபோல் உடைத்து கொள்ள வேண்டும்.பிறகு வெந்தயம்+உளுந்து ஒன்றாக கலந்து ஒரு பாதி நைசாகவும் மறுபாதி 1/2பருப்பு இருப்பது போல் அரைக்கவும்.பின்பு எல்லாம் கலந்து அரிசி+உ.ப+வெந்தயம்+தயிர்+உப்பு+தண்ணீர் எல்லாம் சேர்ந்து இட்லி பதத்திற்கு கலந்து வைக்கவும்.மறுநாள் காலை சீரகம்+மிளகு+சுக்கு எல்லாம் ஒன்றும் பாதியாக இடித்து நெய்+எண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து நெய் கரையும் வரை வைத்து அடுப்பை அணைத்து அதில் இடித்த பொருட்கள்+பெருங்காயம் சேர்த்து கலந்து மாவில் கொட்டி நன்றாக கலந்து உப்பு சரிபார்த்து ஒரு மணிநேரம் விட்டு இட்லி ஊற்றவும்.இந்த இட்லி சிறிய இட்லி தட்டுகள் அங்கங்கே துளைகள் உள்ள தட்டாக இருந்தால் வாழை இலை &மந்தாரா இலை போட்டு இட்லி ஊற்றினால் சுவையாக இருக்கும்.பெரிய இட்லி யாகவும் வைக்கலாம்.மேலும் நாம் வெளியூர் பயணத்தின் போது கெடாமல் இரு நாட்கள் நன்றாக இருக்கும்.இதே மாவில் 1/2அடி கணமாக ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்தால் கோயில் தோசை ரெடி.இதைஅப்படியேயும் சாப்பிடலாம்.அல்லது இட்லி பொடி வெங்காயம் சட்னி உடனும் சாப்பிடலாம்.
வெங்காய சட்னி; முதலில் மிளகாய்+உப்பு போட்டு தூள் செய்து பிறகு வெங்காயம் புளி, வெல்லம் (உங்கள் விருப்பம்) பெருங்காயம் பூண்டு எல்லாம் சேர்ந்து அரைத்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கருவேப்பிலை போட்டு பிறகு அரைத்த விழுது+சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.இப்பொழுது சுவையான கஞ்சி இட்லி கோயில் தோசை வெங்காயம் சட்னி ரெடி.😋😋😋😊🙏🏻
Total Votes: 267
Total Views: 1877