Recipe Name: Muddha kudumu with side dish Mirigam and Thaligala paravannam
Recipe by: B.Chitra
Ingredients:
முத்த குடுமு செய்ய பச்சரிசி 1கப், பாசிப்பருப்பு 2டீஸ்பூன், கடலைப்பருப்பு 2டீஸ்பூன், தேங்காய் துருவல் 6ஸ்பூன், உப்பு, நீர் 2கப் தாளிகல பரவன்னம் செய்ய அரிசி மாவு 1கப், நீர் 1கப், வெல்லம் 3/4கப், ஏலக்காய் 3, தேங்காய் 1/4கப்,பறங்கி விதை 2ஸ்பூன் மிரிகம் செய்ய பெரிய வைங்காயம்1, தேங்காய் 4ஸ்பூன், உப்பு, மிளகாய் தூள் 1ஸ்பூன், சர்க்கரை 1ஸ்பூன், நெய் 1ஸ்பூன், நல்லெண்ணெய் 2ஸ்பூன்
Procedure:
முத்த குடுமு செய்ய
பச்சரிசியை கழுவி ஓர் துணியில் பரப்பி நிழலில் காயவைத்து மிக்ஸியில் சிறிது குறுணையாக பொடித்து கொள்ளவும்.
ஓர் பாத்திரத்தில் 2கப், தேவையான உப்பு சேர்த்து கொதிக்கும் போது அரிசி குறுணை சேர்த்து கிளறி இறக்கவும். அதனுடன் ஊற வைத்த பாசிப்பருப்பு , கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி உருண்டை செய்து தடிப்பாக தட்டி இட்லி தட்டில் வைத்து 1/2 மணி நேரம் வேக வைத்து எடுக்கவும்.
மிரிகம் செய்ய
தேங்காய் 2 ஸ்பூன் மிக்ஸியில் அரைத்து, பெரிய வைங்காயம்1 நறுக்கி அதனுடன் அரைக்கவும்.பின்னர் உப்பு , மிளகாய் தூள், சர்க்கரை சேர்த்து அரைத்து நெய், நல்லெண்ணெய் சேர்த்து கிளறி விடவும்.
தாளிகல பரவன்னம் செய்ய
அடுப்பில் ஓர் பாத்திரத்தில் 1கப்நீர் ஊற்றி கொதிக்கும் போது உப்பு சேர்த்து அரிசி மாவு 1கப் சேர்த்து 10நிமிடம் ஸிம்மில் வேக வைக்கவும்.பிறகு ஒரு தட்டில் கொட்டி நன்கு பிசைந்து முறுக்கு அச்சில் பிழிந்து தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். ஓர் பாத்திரத்தில் 1/2நீர் ஊற்றி கொதிக்கும் போது வெல்லம் சேர்த்து வடிகட்டி வேகவைத்த முறுக்குகளை துண்டு களாக்கி கலக்கவும்.தேங்காய், ஏலக்காய்,பறங்கி விதை மிக்ஸியில் அரைத்து சேர்த்து கிளறி கொதிக்கும் போது இறக்கவும்.
Total Votes: 78
Total Views: 1224