Recipe Name: பெருகு குடுமு
Recipe by: Srilakshmi
Ingredients:
பச்சரிசி - 4 கப், துவரம் பருப்பு - 1கப், உளுத்தம் பருப்பு - 1 கப், கடலை பருப்பு - 2 டே.ஸ்பூன், பயத்தம் பருப்பு - 2 ஸ்பூன்(ஊற வைத்து போடவும்), பச்சை மிளகாய் -2, கருவேப்பிலை - சிறிது, இஞ்சி - 1 துண்டு, நல்லெண்ணைய் - 4 ஸ்பூன், சோடா உப்பு - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கடுகு - தாளிக்க, புளித்த தயிர் - அரை லிட்டர்
Procedure:
பச்சரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மூன்றையும் ரவை போல் மிக்ஸியில் போட்டு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் போட்டு கடலைப்பருப்பு ,பயத்தம் பருப்பு, உப்பு போட்டு தயிர் ஊற்றி கலக்கி வைக்கவும். எட்டு மணி நேரம் புளிக்க வைத்து , அதில் கடுகு தாளித்து போட்டு , ப.மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை போட்டு சிறிது நல்லெண்ணைய் ஊற்றி , ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டு நன்கு கலந்து இட்லி தட்டில் ஊற்றி வைத்து எடுக்கவும். இதற்கு மோர் மிளகாய் ப்ரை செய்து வைக்கவும்.
Total Votes: 424
Total Views: 2412