Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: சர்க்கரை வள்ளி கிழங்கு புளி உப்புமா
Recipe by: Bhama subbuvenkatraman
Ingredients:
சர்க்கரை வள்ளி கிழங்கு துருவல் 2கப்,இட்லி அரிசி 1கப்,பச்சரிசி 1கப்,தேங்காய் துருவல் 1/2 கப்,வரமிளகாய் 6,பெருங்காயம் 1 ஸ்பூன்,வெல்லம் - சிறிது,புளித்தண்ணீர் 1/2 கப், உப்பு தேவையான அளவு,கறிவேப்பிலை,நல்லெண்ணெய், உ.பருப்பு 1/4 ஸ்பூன், க.பருப்பு 1/4 ஸ்பூன், வேர்க்கடலை பருப்பு 1/4 ஸ்பூன்.
Procedure:
இரண்டு அரிசி களையும் ஒன்றாக 2மணி நேரம் ஊறவைக்கவும். மிக்சியில் தேங்காய் துருவல், வரமிளகாய், பெருங்காயம், சர்க்கரை வள்ளி கிழங்கு துருவல், வெல்லம், உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஊறிய அரிசி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அடிகனமான கடாயைஅடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு, உ. பருப்பு, க. பருப்பு, வேர்க்கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது புளிக்கரைசல் நீர் சேர்த்து, கிளறி மூடி வைத்து வேகவிடவும் நன்றாக வெந்ததும் பொல பொல என்று வரும்போது இறக்கவும். சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு உப்புமா தயார்... தொட்டுக்கொள்ள: சிறியவெங்காயம் ஊட்டசாமான்கள்-மாகாளி கிழங்கு, கள்ளிஅவரைக்காய், முக்கரைக்காய், அகத்திகாய்.
Total Votes: 502

Total Views: 3040