Recipe Name: சிகப்பரிசி முத்தக்குடும்
Recipe by: Sudandira Devi
Ingredients:
சிகப்பரிசி- ஒரு கப், ராகி மாவு-1/4 கப், தேங்காய்த்துருவல்-1/2 கப் ஊறவைத்த பாசிப்பருப்பு -2 ஸ்பூன் ஊறவைத்த கடலை பருப்பு -1 ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப சைடிஷ் க்கு தேவையான பொருட்கள்: தேங்காய், காய்ந்த மிளகாய், புளி, வெல்லம்
Procedure:
முதலில் சிகப்பு அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பின்பு நீர் இல்லாமல் வடிகட்டி ஆற வைக்க வேண்டும் மிக்ஸியில் கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ராகி மாவு கால் கப் சேர்க்க வேண்டும் வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்த பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வேண்டும் இந்த இரண்டு பருப்புகளும் சிறிது வெந்தவுடன் தேங்காய் சேர்க்க வேண்டும் பின்பு சிகப்பரிசி மற்றும் ராகி மாவு கலந்த கலவையை சேர்க்கவும் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும் ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும் பின்பு மாவை நன்றாக கிளறவும் கிளறிய மாவு ஆறியவுடன் உருண்டைகள் செய்து தட்டி குக்கரில் வேகவைத்து எடுக்கவும் இப்பொழுது சுவையான சிகப்பு அரிசி முத்த குடும் தயார்.
சைடு டிஷ்:
தேங்காய், காய்ந்த மிளகாய், புளி சிறிது, வெல்லம் சிறிது, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் பின்பு இதை கொதிக்கவிட்டு இறக்கவும்
Total Votes: 208
Total Views: 1525