Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Sajjalu(கம்பு) dhokla.இனிப்பு,காரம்
Recipe by: santhiya karthik
Ingredients:
இனிப்பு டோக்ளா: பாசி பயிறு-1 கப், சிகப்பு அவல்-1 கப், கம்பு-1 கப், பேரிச்சம்பழம் - 4,அத்திப்பழம் - 4. காரம் டோக்ளா : பாசி பயிறு-1 கப், சிகப்பு அவல்-1 கப், கம்பு-1 கப், நெல்லிக்காய் (பெரியது) - 2,பச்சைமிளகாய் (காரத்திற்கு தகுந்தாற்), உப்பு.
Procedure:
இனிப்பு டோக்ளா பாசி பயிறு ஊறவைத்து முளை கட்டி கொள்ளவும். கம்பு பொடித்து கொண்டு 1க்கு 1 1/2 நீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.கம்பு, பாசி பயிறு(முளை) தனி தனியாக அரைத்து, அவலை கழுவி இதனுடன் சேர்த்து பேரிச்சம்பழம், அத்திப்பழம் அரைத்து விழுதுடன் கலந்து ஆவியில் வேக விடவும் 10 முதல் 15 நிமிடம் வரை. வெந்ததும் சதுர துண்டுகளாக கட் செய்து மேலே முந்திரி நெய்யில் வறுத்து அலங்கரிக்கவும். அழகான சத்தான இனிப்பு டோக்ளா ரெடி. காரம் டோக்ளா : பாசி பயிறு ஊறவைத்து முளை கட்டி கொள்ளவும். கம்பு பொடித்து கொண்டு 1க்கு 1 1/2 நீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.கம்பு, பாசி பயிறு(முளை) தனி தனியாக நெல்லிக்காய், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் (கரகரப்பாக) அவலை கழுவி வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஆவியில் வேக விடவும் 10 முதல் 15 நிமிடம் வரை. வெந்ததும் சதுர துண்டுகளாக கட் செய்து எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அலங்கரிக்கவும். அழகான சத்தான கார டோக்ளா ரெடி.
Total Votes: 252

Total Views: 1689