Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: அன்டிப்பூ ரொட்ட ( வாழைப்பூ அடை)
Recipe by: Nandhini SathishKumar
Ingredients:
தேவையான பொருட்கள்:- புழுங்கல் அரிசி - 1கப், பச்சரிசி - 1கப், துவரம்பருப்பு -1/2கப், (பை.பருப்பு+க.பருப்பு+உ.பருப்பு ) - 1/2 கப்(மூன்றும் சேர்த்து), வாழைப்பூ-1, வெங்காயம் 1, சிவப்பு.மிளகாய் -7 பச்சை.மிளகாய்-7 (காரத்திற்கேற்ப), இஞ்சி -1 துண்டு, சீரகம்-1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை.
Procedure:
செய்முறை: # புழுங்கல் அரிசி , பச்சரிசி மற்றும் பருப்பு வகைகள் தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும். # ஊறவைத்த அரிசி+இஞ்சி+சீரகம்+மிளகாய்+ கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும் பின்பு பருப்பு வகைகளை அரைத்துக்கொள்ளவும் (அடை பதத்திற்கு) # அரைத்த மாவை ஒன்றாக சேர்த்து + பொடியாக நறுக்கிய வாழைப்பூ+ பொடியாக நறுக்கிய வெங்காயம் + உப்பு (தே.அளவு) + கடுகு, கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து சேர்க்கவும் நன்றாக மாவை பிசைந்து கொள்ளவும் # அடை மாவு தயார் , சிறிது மாவு எடுத்து இலையில் அடை தட்டவும் பின்பு தோசை கல் சூடானதும் அடையை மெதுவாக சேர்க்கவும் சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைத்து வேகவிடவும் .இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். # அடை தயார் சூடாக புதினா துவையல் உடன் பரிமாறவும். 🙂சுவையான வாழைப்பூ அடை தயார் 🙂
Total Votes: 828

Total Views: 6862