Recipe Name: Pesalappu amarthapalam
Recipe by: Kamala sathyanarayanan
Ingredients:
பாசிப்பருப்பு ஒரு டம்ளர் தயிர் ஒரு டம்ளர் பச்சை மிளகாய் 8 இஞ்சி ஒரு சிறிய துண்டு தேங்காய் துருவியது ஒரு பிடி உப்பு தேவையான அளவு தாளிக்க கடலை எண்ணெய் கடுகு ,உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை
Procedure:
பாசிப் பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து தரதரவென அரைத்து நாம் எடுத்து வைத்த மோரில் கலந்து வைக்கவும்
பச்சை மிளகாய் உப்பு இஞ்சி இவற்றை நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய் இஞ்சி விழுதை நன்கு வதக்கி பாசிப்பருப்பு மோர் கலவையை வாணலியில் இட்டு பத்து நிமிடங்கள் கைவிடாமல் நன்கு கிளறவும் இப்பொழுது துருவிய தேங்காயை போட்டு நன்கு கலந்து வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கிளறி எண்ணை தடவிய தட்டில் கொட்டி சரி செய்து பின் வில்லைகளாக எடுக்கவும் இப்பொழுது சூப்பரான ஆந்திரா பெசலப்பு அமர்த்த பலம் ரெடி. தேங்காய் சட்னி பூண்டு சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன் பயணங்களின்போது எடுத்துச்செல்ல நல்ல ஒரு ரெசிபி உங்களின் பார்வைக்கு
Total Votes: 327
Total Views: 3443