Recipe Name: Paunu Kasalu
Recipe by: D. PadmaDevendiran
Ingredients:
பச்சரிசி மாவு 1 டம்ளர், கடலை மாவு 1 டம்ளர் , தண்ணீர் ஒரு டம்ளர், சிறிதளவு எண்ணெய், உப்பு தேவையான அளவு. சட்னி அரைக்க தேவையான பொருட்கள்: சட்னி கடலை 200 கிராம், தேங்காய் அரை மூடி, பச்சை மிளகாய் 6, புளி சிறிதளவு, சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, தாளிப்பதற்கு கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு.
Procedure:
அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் உப்பு சிறிதளவு எண்ணெய் சிறிதளவு போட்டு அடுப்பை ஏற்ற வேண்டும் பிறகு தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து கடலை மாவு பச்சரிசி மாவு இரண்டையும் கலந்து அந்த தண்ணீரில் கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து தட்டுப் போட்டு மூடிவிட வேண்டும் .15 நிமிடம் கழித்த பிறகு அந்த மாவை நன்றாக பிசைந்து சிறுசிறு பாம்புகளாக செய்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். பிறகு சிறிய சிறிய தட்டையான வில்லைகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சட்னி அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் தண்ணீர்விட்டு நன்றாக மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு வருத்த பிறகு அரைத்து வைத்துள்ள சட்னி விழுதை கொட்டி நன்றாகக் கிளற வேண்டும், பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி பிறகு கட் பண்ணி வைத்துள்ள சிறு சிறு உருண்டைகளை அதில் போட்டு நன்றாக கிளறி இறக்கும் சமயத்தில் சிறிதளவு எலுமிச்சை பழம் சாரத்தை விட்டு நன்றாக கலந்து கொத்தமல்லி, கருவேப்பிலை அறிந்து போட்டு பரிமாறவும். சுவையான, பாரம்பரியமான, சத்துள்ள பவுன் காசுகள் தயாராகி விட்டது.
Total Votes: 237
Total Views: 1668