Recipe Name: தேங்காய் பால் கஞ்சி, தேங்காய் துவையல்
Recipe by: Uma Rajamurugan
Ingredients:
புழுங்கல் அரிசி ஒரு டம்ளர், வெந்தயம் ஒரு ஸ்பூன், பூண்டு 10 பல், தேங்காய் துருவல் ஒரு கரண்டி உளுத்தம்பருப்பு ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், 5 மிளகாய் வத்தல், உப்பு, புளி 2 inch, தேங்காய் ஒரு மூடி
Procedure:
புழுங்கல் அரிசியை கழுவி ஆறவைத்து ரவை போல் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் 10 டம்ளர் தண்ணீர் வைத்து கொதித்ததும், ரவையை போட்டு வெந்தயம் ஒரு ஸ்பூன் போட்டு அது நன்கு கொதித்து வெந்ததும் பத்து பூண்டு பல் போட்டு, ஒரு கரண்டி தேங்காய் துருவலை பால் எடுத்து ஊற்றவும். உப்பு போடவும். நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். இதை பாத்திரத்தில் செய்தால் தான் ருசியாக இருக்கும் குக்கரில் வேகவைக்க வேண்டாம்.
துவையல் செய்வதற்கு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வத்தல் இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அத்துடன் உப்பு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து துவையல் ரெடி செய்யவும்
Total Votes: 125
Total Views: 1213