Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: பாரம்பரிய மிக்க ஆரோக்கியமான காஞ்சிபுரம் இட்லி
Recipe by: Uma Maheswari Poongol
Ingredients:
காஞ்சிபுரம் இட்லி செய்முறை: தேவையான பொருள்கள்:- 1.பு. அரிசி- 1 டம்ளர் 2.ப.அரிசி- 1 டம்ளர் 3.வெ.கு.உளுந்து - 3/4 டம்ளர் 4. வெந்தயம்-1 spoon 5.புளித்த தயிர்-1டம்ளர் 6.உப்பு- தேவையான அளவு, கார சட்டினி செய்முறை: தேவையானவை:- 1. சிறிய வெங்காயம்- 1 கைப்பிடி (தோல் எடுத்தது) 2.சிகப்பு மிளகாய்- காரத்திற்கு ஏற்ப 3.சீரகம்- 2 spoons 4.தனியா- 2 spoons 5. புளி - சிறிது 6. உப்பு- சிறிது 7. பெருங்காயம்- சிறிது
Procedure:
மேலே கூறிய அனைத்தும் முதல் நாள் இரவே ஊறவைத்து அரைத்து கொள்ளவும். 🔹மறுநாள் காலையில் புளித்த மாவில் கறிவேப்பிலை- சிறிது சுக்கு- 3 spoon(தோல் எடுத்து தூள் செய்தது) மிளகுத்தூள்-1/2 spoon சீரகத்தூள்- 3 spoons நெய்- 4 spoons பெருங்காயம்- தேவையான அளவு முந்திரி பருப்பு- பாதியாக உடைத்தது (தேவைக்கேற்ப). 🔹மேலே கூறிய அனைத்தையும் நெய்யில் தாளித்து மாவில் சேர்க்கவும். 🔹மாவை நன்றாக கலக்கி டம்ளரில் நெய் தடவி முக்காள் டம்ளர் அளவு மாவை ஊற்றி இட்லி வேக வைப்பது போல் வேக வைக்கவும். 🔹வெந்த பிறகு சிறிது நேரம் ஆறவைத்து கத்தியால் எடுக்கவும் கார சட்டினி செய்முறை: 🔹இவை அனைத்தும் வானலியில் எண்ணெய் சேர்த்து வருத்து அரைக்கவும். 🔹விருப்பப்பட்டால் கடுகு தாளித்து சேர்க்கவும். சூடான சுவையான பாரம்பரிய காஞ்சிபுரம் இட்லி தையார்.
Total Votes: 393

Total Views: 2040