
Recipe Name: மாம்டிகாய் பெருகு பச்சடி (மாங்காய் தயிர் பச்சடி)
Recipe by: Chitra Govindan
Ingredients:
சின்ன மாங்காய் - 1 கப் தேங்காய் - 1/4 கப் பொட்டுக்கடலை - 1/2 கப் தயிர் - 1 கப் வறுத்த மிளகாய் வற்றல் - 6 உப்பு - தேவையான அளவு தாளிக்க: கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, 1மிளகாய்.
Procedure:
மாங்காய், தேங்காய், பொட்டுக்கடலை, வறுத்த மிளகாய் அனைத்தையும் ஒரு மிக்சியில் சேர்த்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து தயிருடன் கலந்து கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து கடைந்த பருப்புடன் சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை. இந்த பச்சடி விரதநாட்களில் செய்து சாப்பிட ஏற்றது. அந்தக் காலத்தின் பாரம்பரிய ரெசிபி இது பாட்டிமார்கள் விரத நாட்களில் செய்வார்கள் நாமும் அதை நினைவில் கொண்டு விரத நாட்களில் இந்த பச்சடியை செய்து சாப்பிடுவோம். நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை.
By,
Chitra Govindan, Chidambaram.
Total Votes: 107
Total Views: 1216




