
Recipe Name: செனிபிண்டி உண்ராலு (Senipindi Undralu)
Recipe by: Mahalakshmi Sridharan
Ingredients:
கடலை மாவு ஒரு டம்ளர் ,பச்சரிசி மாவு ஒரு டம்ளர் ,தண்ணீர் இரண்டு டம்ளர் ,எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் , உப்பு தேவையான அளவு . மசாலா அரைக்க: வர மிளகாய் இரண்டு, சீரகம் ஒரு டீஸ்பூன், தேங்காய் அரை மூடி பொட்டுக்கடலை 5 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு, புளி சிறிது , பெருங்காயம் 2 சிட்டிகை.
Procedure:
இரண்டு மாவையும் சலித்து நன்றாக கலந்து கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு போட்டு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பின் சலித்த மாவை அதில் போட்டு அனலைக் குறைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். பின் மாவை கலந்து விட்டு அதை ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். மாவை நன்றாக பிசைந்து அதை நீளமாக உருட்டி ஒரு இட்லி தட்டில் சுருட்டி வைக்கவும். ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்.ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக அறிந்து கொள்ளவும். கொடுத்துள்ள மசாலா பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பின் நாம் அறிந்து வைத்துள்ள அந்த உருண்டைகளை அதில் சேர்த்து அரை அனலில் வைத்து மெதுவாக கலந்து விட்டு இறக்கவும்.
Total Votes: 231
Total Views: 1574




