
Recipe Name: தவிள பிள்ளளு
Recipe by: G.Kamala Kumari
Ingredients:
ஒரு டம்ளர் பச்சரிசி கால் டம்ளர் துவரம்பருப்பு கால் ஸ்பூன் மிளகு கால் ஸ்பூன் சீரகம் இவை எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும் ஒரு கனமான பாத்திரம் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் 2 பெருங்காயம் தாளித்து அதில் ஒரு டம்ளர் இந்த ரவைக்கு இரண்டரை டம்ளர் தண்ணீர் அளந்து வைக்கவும் தண்ணீர் கொதிக்கும் பொழுது தேவையான உப்பு 3 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்க்கவும் பின் இந்த ரவையை கொட்டி கிளறவும் பாதி வெந்ததும் அடுப்பை அனைத்து விட்டு மூடி வைக்கவும் 5 நிமிடங்கள் கழித்து நன்கு பிசைந்து கொண்டு சிறு சிறு உருண்டைகளாக செய்து வடை போல் தட்டி கொள்ளவும் இதை சூடான தோசைக்கல்லில் மொறுமொறுப்பாக இருபுறமும் சுட்டு எடுக்கவும் சிறிது நெய் சேர்த்து சுட்டால் மிகவும் வாசனையாக இருக்கும் சுவையான பாரம்பரியமிக்க டிபன் ரெடி
Procedure:
தேங்காய் துவையல்:
ஒரு சிறிய மூடி தேங்காய் துருவியது நான்கு ஸ்பூன் உளுத்தம் பருப்பு 4 காய்ந்த மிளகாய் சிறிது பெருங்காயம் இவற்றை சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறியதும் தேவையான உப்பு புளி வைத்து கரகரப்பாக அரைக்கவும் அத்தோடு தேங்காய் சேர்க்கவும்
Total Votes: 167
Total Views: 1328




