
Recipe Name: Thenkkaya Pidchallu
Recipe by: Uma Mohandass
Ingredients:
தேவையான பொருட்கள்..புழுங்கல் அரிசி ஒரு கப்..தேங்காய் ஒன்று. தேவையான அளவு உப்பு. தாளிக்கும் பொருட்கள்..ரீஃபைண்ட் ஆயில் ஒரு டே.ஸ்பூன்.. பச்சை மிளகாய் 4.. பச்சை கொத்தமல்லி..கருவேப்பிலை. பொடியாக அரிந்து வைக்கவும். துவரம்பருப்பு கால்கப் வேகவைத்துக் கொள்ளவும். வெல்லம் இடித்தது அரை கப்..
Procedure:
புழுங்கல் அரிசியை சுரீர் என காய வைத்த வெந்நீரில் ஊற வைத்து..தேங்காய்..உப்பு சேர்த்து கோதுமை ரவை பதத்திற்கு கெட்டியாக அரைத்து..தட்டில் பரத்தி ஆவியில் இருபது நிமிடம் வேகவைத்து(அடியில் ஒரு கிண்ணத்தில் வேகவைக்க வேண்டிய துவரம்பருப்பையும் வைத்தால் அதுவும் வெந்துவிடும்) ஆறவிடவும்.
ஆறியதும் சின்ன சதுரங்களாக நறுக்கவும்.மூன்றில் இரண்டு பாகத்தை பருப்பு தாளிக்கவும்..மீதியை இனிப்பிற்கும் ஒதுக்கிக்கொள்ளவும்.வாணலியில் எண்ணைவிட்டு
கடுகு தாளித்ததும்..கடலைப்பருப்பு..உளுத்தம்பருப்பு..சேர்த்து பொன்னிறமாக தாளித்ததும்..பச்சைமிளகாய்..கருவேப்பிலை..வெந்த பருப்பு..அரிந்த அரிசித் துண்டங்களை சேர்த்து..கலந்து இறக்கும்போது கொத்தமல்லி தூவி கலக்கவும்.
இனிப்பு..
வெல்லத்தை தூள் செய்து கனமான பாத்திரத்தில் பாகாக செய்து வடிகட்டி பின் அரிசித் துண்டங்களை சேர்த்து கலந்து இறக்கவும்.
தேவைப்படின் ஏலம்.. முந்திரி சேர்க்கலாம்.
ஆனால் பாரம்பரிய வழக்கப்படி மிக எளிதான உணவாகவே செய்யப்பட்டது.
இது என் மாமியார்(கூடலூர்) வழி பரம்பரை உணவு. நம் சமூகத்தில் மட்டுமே காணப்பட்ட வகை காலை உணவு.
வீட்டில் உள்ள அரிசி..தேங்காய்..அடிப்படை தாளிப்பு பொருட்கள் இருந்தாலே போதும்.
அத்தனை எளிமை..
வள்ளுவரின் சொல்படி மாறுபாடு இல்லாத இவ்வகை உணவுகள் வயிற்றுக்கு கேடு செய்யாதவை.
Total Votes: 314
Total Views: 2284




