Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Masala puri and pani puri
Recipe by: Vimala babu
Ingredients:
பூரி: ரவை, மைதா, எண்ணெய், உப்பு. மசாலா: கருப்பு கொண்டைக்கடலை, பட்டை, இலவங்கம், சோம்பு, ஏலக்காய், கொத்தமல்லி, தனியா, புதினா, கறிவேப்பிலை, உப்பு, மிளகு, சிகப்பு மிளகாய். பாணி: புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, மிளகு, உப்பு. மீட்டா சட்னி: பேரிச்சை, புளி, வெல்லம், உப்பு, தண்ணீர். கிழங்கு: உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, வெங்காயம்
Procedure:
பாணி: புதினா, கறிவேப்பிலை கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கொள்ளவும். கிழங்கு: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, அரிந்த வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள் சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும். பூரி: இரு கப் ரவை, இரு மேச கரண்டி மைதா, சிறிது எண்ணெய், சிறிது உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ஒரு மணி நேரம் ஈர துணி போட்டு மூடி பிறகு பூரி செய்யவும். மசாலா: வேக வைத்த கொண்டக்கடலை பாதியை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். மிக்ஸியில் சிறிது பட்டை, 1ஸ்பூன் சோம்பு, 5 கிராம்பு, 5ஏலக்காய், தனியா, கொத்தமல்லி, புதினா, மிளகு, சிகப்பு மிளகாய் சேர்த்து அரைத்து கடாயில் இட்டு வணக்கி, கொண்ட க்கடலை விழுது மற்றும் வேக வைத்த கொண்டக்கடலைகளை சேர்த்து, தேவையான உப்பு, நீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். மீட்டா சட்னி: 1 மணி நேரம் ஊர வைத்த பேரிச்சம் பழம், புளியோடு வெல்லம், உப்பு, சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
Total Votes: 19

Total Views: 1035