Recipe Name: புலுசு பிண்டி
Recipe by: M.
Ingredients:
இ.அரிசி 400gm, தேங்காய் 1மூடி,புளி 2விரல் நீட்டத்திற்க்கு,உப்பு 1.1/2sp, வெல்லம் 3sp,கடுகு1/2 ,க.பருப்பு 2sp,உ.பருப்பு,2sp,மிளகாய் 10,கறுவேப்பிலை2sp,எண்ணை 1/4cup.
Procedure:
இ.அரிசியை கழுவி 2மணி நேரம் ஊற விட்டு மிக்ஸியில் தேங்காய் ,உப்பு ,புளி, 7 மிளகாய் சேர்த்து ஒரு முறை ரன் செய்து பின் அரை படும் அளவுக்கு நீர் மற்றும் ஊறவைத்த அரிசி சேர்த்து சிறு நொய்யாக அரைத்து வெல்லம் சேர்த்து லேசாக அரைத்துக் கொண்டு ,அரைத்த மாவை 1 லிட்டர் அளவுக்கு இருக்கும் படி தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டு அடுப்பில் நல்ல கனமான வாணலியை வைத்து எண்ணையை ஒரே இடத்தில் ஊற்றாமல் வாணலியின் எல்லாயிடத்திலும் படும் படியாக சுற்றிலும் படும் படி ஊற்றவும், இது போல் ஊற்றும் போது அடி சக்கை நான் படத்தில் காட்டியது போல் மொரு மொருப்பாக ஆப்பம் போல் அழகாக வரும் ,ஏண்ணை சூடான பின் கடுகு தாளித்து பின் பருப்பு வகைகளை சேர்த்து பொன் நிறமாக மாறியதும் மிளகாய் துண்டுகள் ,கறுவேப்பில்லை சேர்த்து அரைத்து வைத்துள்ள மாவை ஒரு முறை கலந்துவிட்டு ஒரு கையில் மாவை ஊற்றிக் கொண்டே மறு கையில் கிளறி ,விட்டுக் கொண்டே ஊற்றி நன்கு மாவை கலந்து விட்ட பின் அடுப்பின் அனலை மீடியம் ஹய்யாக வைத்து மூடி வைக்கவும் 5நிமிடம் கழித்து நிதனமாக கரண்டியால் மாவை கிளரி விடவும்,கிளரும் போது கரண்டி அடி வரை செல்லாமல் மாவை மட்டும் கிளரும் படி கிளரவும் இப்படி கிளருவதால் அடி சக்கை நல்ல கனமான சக்கையாக வரும் , மாவு பாதி வேகும் போதே சக்கை நன்கு தயார் ஆகி இருக்கும் இப்போது சக்கையின் மேல் ஓரங்களை தோசை கரண்டி வைத்து நிதானமாக சுற்றிலும் எடுத்து விட்டு மெல்ல மெல்லா எல்லா சக்கையையும் எடுத்து பின் கரண்டியை சக்கையின் அடி புரம் வரை எடுத்து சென்று மாவை அப்படியே திருப்பிவிட்டால் சக்கை வாணலி சைசுக்கு அப்படி யே எடுக்கலாம் , சக்கையை எடுத்தபின் மீதம் உள்ள மாவை நன்கு பரப்பி விட்டு இதே முறையில் மற்றும் ஒரு முறை சக்கை எடுத்த பின் மாவை வாணலியில் நன்கு பரப்பி விட்டு மூடி வைத்து ,அடுப்பை அணைத்து விடுங்கள் 20 நிமிடம் கழித்து திறந்தால் அருமையான புலுசுபிண்டி தயாராக இருக்கும்.
Total Votes: 556
Total Views: 2884