Recipe Name: Watermelon Rind 10 mins Thokku
Recipe by: Hema Lakshmanan
Ingredients:
1.தர்பூசணி பழம் வெள்ளை தோல் -1கப் 2.பெருங்காயம் 1 ஸ்பூன் 3.காய்ந்த மிளகாய்-5 4.கடுகு-1ஸ்பூன் 5.வெந்தயம்-1ஸ்பூன் 6.உப்பு தேவையான அளவு 7.மஞ்சள் தூள் 1|2 ஸ்பூன் 8.லெமன் -1 9.எண்ணெய் 5 ஸ்பூன் 10.தாளிக்க கடுகு, உ. ப, க. ப, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்.
Procedure:
முதலில் வெறும் வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம் இவற்றை பொன்னணிரமாக வறுக்கவும் பின் ஆறவைத்து மிக்ஸில் வறுத்த பொருட்கள் உடன் பெருங்காயம், உப்பு,மஞ்சள் தூள் சேர்த்துஅரைத்து கொள்ளவும் இப்போ தொக்கு பொடி தயார்.
தர்பூசணி பழத்தை சாப்பிட்டு தோலை தூக்கி போடாமல் அந்த தோலை எடுத்து "பச்சை நிறத் தோலை தோல் சீவி "
வெள்ளை நிற தோலை சின்ன சின்னதாக cut செய்து எடுத்து கொள்ளவும்,பின் cut செய்த வெள்ளை நிற தோலை மிக்ஸியில் "தண்ணீர் சேர்க்காமல்" அரைக்கவும்.
இப்போது அடுப்பில் வாணலியை வைத்து "எண்ணெய் சேர்க்காமல்" அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை 10 நிமிடம் கிளரவும், அதன் பின் எண்ணெய் 4 ஸ்பூன் சேர்த்து 1 mins வதக்கவும் வதங்கிய உடன் மிக்ஸியில் அரைத்த தொக்கு பொடியை சேர்த்து கிளறி இறக்கவும், தாளித்து லெமன் சாறு சேர்த்து பரிமாறவும்.
சுவையான
*தர்பூசணி தோல் தொக்கு* தயார்.
Total Votes: 41
Total Views: 1308