Recipe Name: முருங்கைக்காய் பருப்பு உருண்டை மஜிகபுலுசு
Recipe by: V.S.Binduu
Ingredients:
தேவையான சாமான்கள் பருப்பு உருண்டைக்கு கடலைபருப்பு 1/2 டம்ளர் துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் முருங்கைக்காய் 3 சீரகம் 1 டேபிள் ஸ்பூன் உப்பு மிளகாய்வற்றல் 3 கறிவேப்பிலை சிறிது. மோர் குழம்புக்கு -------------------------------- புளித்ததயிர் 2 கப் தேங்காய் துருவல் 5 டேபிள் ஸ்பூன். மிளகாய் வற்றல் 6 பொட்டுகடலை 2 டேபிள் ஸ்பூன். மல்லி 2 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன் பெருங்காயம் சிறிது கறிவேப்பிலை உப்பு மஞ்சள்ப்பொடி கடுகு எண்ணெய் தாளிக்க
Procedure:
முருங்கைக்காய் வேகவைத்து உள்இருக்கும் விழுதை தனியாக எடுத்து வைக்கவும். கடலைபருப்பு துவரம்பருப்பு 1 மணி நேரம் முன்பு ஊற வைக்கவும். ஊறின பின் முருங்கை விழுது பருப்பு உருண்டைக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் சேர்த்து கொர கொரவென்று அரைத்துக்கொள்ளவும்.பின் அதை சிறிய உருண்டைகளாக செய்து இட்லி பானையில் வேகவைத்து எடுத்து தனியாக வைக்கவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து புளித்த மோர் ஊற்றி கொதிக்க விடவும். பொட்டுகடலை, தேங்காய் துருவல், மல்லி, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை நைஸாக அரைத்து ஊற்றவும்.தேவையான உப்பு சேர்க்கவும். மஞ்சள் பொடி பெருங்காயம் சேர்க்கவும். நன்கு கொதித்த பின் பருப்பு உருண்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதித்த பின் கறிவேப்பிலை சேர்த்து பின்அடுப்பை ஆப் செய்யவும்.
Total Votes: 68
Total Views: 1331