Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Thabila dosai
Recipe by: c k sushma
Ingredients:
பச்சை அரிசி ~3 கப், துவரம் பருப்பு ~1 கப், கடலை பருப்பு ~ 2 டீ ஸ்பூன், உப்பு ~ தேவையான அளவு, கடுகு ~ 1 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் ~5, வெங்காயம் ~ 2 பெரியது, கருவேப்பிலை 15 இலை, தயிர் தேவையான அளவு
Procedure:
பச்சை அரிசி மற்றும் துவரம் பருப்பை இரண்டையும் மிக்ஸியில் சின்ன ரவை போல் அரைத்து கொள்ளவும். அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொண்டு அரைத்த ரவையோடு கடலை பருப்பை சேர்த்து, 1கப் அரைத்த ரவைக்கு 1 கப் தயிர் விகிதம், தையிரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் 2 ஸ்பூன் சமையல் எணணெய் விட்டு அதில் கடுகு, சிகப்பு மிளகாய் துண்டு செய்து, கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வதக்கியதை ஊறிய ரவையில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் தேவைபட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளவும் (அடை மாவு போல் இருக்க வேண்டும்) பிறகு பித்தளை வாணலியில் மிதமான சூட்டில் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு பின்னர் 4 கரண்டி மாவை உற்றவும். மாவை வுற்றிய பிறகு one தட்டை வைத்து மூடவும், தட்டில் ஒரு டம்ளர் தண்ணிரை ஊற்றி வைக்கவும். தட்டில் இருக்கும் தண்ணீர் கொதிக்கும் பொழுது தோசையை திருப்பி போட வேண்டும். திருப்பி போட்ட 5 நிமிடம் கழித்து எடுத்து விடவும். இதை பச்சை வெங்காய மிளகாய் சட்னியுடன் பரிமாறவும். வெங்காய சட்னி செய்முறை: வெங்காயம் 2 காய்ந்த மிளகாய் 3 உப்பு தேவையான அளவு அம்மியில் அரைத்து கொள்ளவும். Cooking in brass vessel helps us to increase immunity. Thoor dhall helps us to facilitate daily demands of iron and calcium.
Total Votes: 799

Total Views: 7216