Recipe Name: பப்பு ஜிங்க கொம்முலு
Recipe by: IndumathiNarayanan
Ingredients:
மைதா - 1 கப், பைத்தம்பருப்பு - 1/2 கப், ப.மிளகாய் , ம.தூள் , தேங்காய் துருவல் - 1/4கப் தாளிக்க- கடுகு , உ.பருப்பு, க.பருப்பு , கறிவேப்பிலை , எண்ணெய் , உப்பு, மல்லி தழை , ப.மிளகாய் - 2
Procedure:
மைதாவை தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து , மிளகு அளவு எடுத்து கட்டைவிரலால் தேய்த்து ஒரு ஜிங்க கொம்மு செய்யவும் . அது போல எல்லா மாவையும் ஜிங்க கொம்முலு செய்து காய வைத்து எடுத்துக் கொள்ளவும். (5 மணி நேரம் காய வைக்கவும்) ஓய்வு நேரத்தில் செய்து காய வைத்தும் எடுத்து வைத்துக்கொள்ளலாம். தண்ணீர் கொதிக்க வைத்து சிறிதளவு உப்பு போட்டு ஜிங்க கொம்முலுவை போட்டு கொதிக்க விடவும். முக்கால் பதம் வெந்ததும், தண்ணீரை வடிகட்டி எடுத்து விடவும். சிறிது பச்சை தண்ணீர் ஊற்றி அலசி வைத்துக் கொள்ளவும். பைத்தம்பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உ.பருப்பு , க.பருப்பு , ப.மிளகாய் , கறிவேப்பிலை தாளிக்கவும். வேகவைத்த பருப்பை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஜிங்க கொம்முலுவை போட்டு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு தேங்காய் துருவல் போட்டு கிளறி மல்லி இலை தூவி இறக்கவும்....
சுவையான பப்பு ஜிங்க கொம்முலு தயார். மேலும் சாரசலில் நாம் செய்யும் எல்லா வகைகளையும் இதில் செய்யலாம். இது மிகவும் பாரம்பரிய டிபனாகும். ஜிங்க கொம்முலுவை வைத்து பாயசம் கூட செய்யலாம்.
Total Votes: 201
Total Views: 3101