
Recipe Name: வெதுரு தீபு வளையாலு
Recipe by: Mrs.ChitraRaj
Ingredients:
தேவையான பொருட்கள் : மூங்கில் அரிசி மாவு -1கப்,கடலை மாவு-1/4கப், ஜீனி-1கப், ஜீரகம்/கறுப்பு எள்-1ஸ்பூன்,சோடா உப்பு-1சிட்டிகை,உப்பு-1சிட்டிகை,ஏலத்தூள்-1ஸ்பூன்,ஜாதிக்காய் தூள்-5சிட்டிகை,பொறிக்க தேவையான எண்ணெய்.
Procedure:
1-மூங்கில் அரிசி மாவு செய்முறை:
மூங்கில் அரிசியை 1மணி நேரம் ஊறவைத்து,களைந்து,நிழலில் ,ஒரு துண்டில் ஈரப்பதம் போக காயவைக்கவும்.
அரிசியை மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும்.
வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
புட்டு,தோசை,இட்லி,அடை,தட்டை, முறுக்கு,கொழுக்கட்டை என நினைத்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் சுவையான,ஆரோக்கியமானதை செய்யலாம்.
இப்பொழுது எளிதான,கரகரப்பான,"வெதுரு தீபு வளையாலு"-நம் பாரம்பரியம் மிக்க இனிப்பு பண்டம் எப்படி செய்வது என காண்போம்.
2மாவுகள்,எள்,சோடா உப்பு,உப்பு அத்தனையும் கலந்து சல்லடையில் சலித்து கொள்ளவும்.
தேவையான தண்ணீர் சேர்த்து வளையங்கள் செய்ய ஏதுவான மாவாக பிசைந்துகொள்ளவும்.
உருக்கிய நெய்யைத் தொட்டுக்கொண்டு வளையங்கள் செய்யவும்.
அடிகனமான பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு ஜீனி சேர்க்கவும்.ஜீனி கரைந்தவுடன் 1ஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.
ஒரு கம்பி பாகு பதம் வைத்து இறக்கிவிடவும். அதில் ஏலப்பொடி மற்றும் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
சட்டியில் எண்ணெய் வைத்து காய்ந்த பிறகு வளையல்களைப் பொறித்து பாகில் சேர்க்கவும்.எல்லா வளையல்களையும் இதே மாதிரி செய்து ,பாகு முழுவதும் இழுத்த பிறகு ஏர்டைட் டப்பாவில் எடுத்து வைக்கவும்.சுவையான,கரகரப்பான "வெதுரு தீபு வளையாலு" ரெடி.
ஜீனிக்குப் பதிலாக வெல்லம் /பனை வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.
மூங்கில் அரிசியின் நன்மைகள்:
உடல் திடம் பெறும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.மூட்டுவலி,சர்க்கரை நோய்க்கு ஏற்றது.சுண்ணாம்புச் சத்து,நார்ச்சத்து மிக்கது.நரம்பு தளர்ச்சியை நீக்கும்.
Total Votes: 178
Total Views: 2209




