Recipe Name: சவரன் சீயாளி
Recipe by: Mrs suganthi sridhar
Ingredients:
அரிசி மாவு -1 ஆழாக்கு, கடலை மாவு -1/2 ஆழாக்கு, தேங்காய் (துருவியது) -3 டேபிள் ஸ்பூன், தனியா -2 டிஸ்பூன், பச்சை மிளகாய்-8, மஞ்சள் தூள்-1 டி. ஸ்பூன், எண்ணெய் -4 டிஸ்பூன். தாளிக்க: கடுகு -1/4 டிஸ்பூன் உளுத்தம் பருப்பு -1டிஸ்பூன் பெருங்காயம் -1/2 டிஸ்பூன் வரமிளகாய் -2 கொத்தமல்லி, கறிவேப்பிலை -சிறிதளவு உப்பு தேவையான அளவு
Procedure:
ஒரு பாத்திரத்தில் 1 3/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு, எண்ணெய், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.அது கொதிக்கும் போது, இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து அதில் சேர்த்து அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.பிறகு அதை நன்றாக கலந்து கீழே இறக்கி 10 நிமிடம் மூடி வைக்கவும்.ஆறியதும் அதை நன்றாக பிசைந்து 1ரூபாய் காயின் சுற்றளவு இருக்குமாறு நீளமாக செய்து ஆவியில் 30 நிமிடம் வேகவைக்கவும்.நன்றாக ஆறியதும் அதை காயின் வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.தேங்காய், தனியா, பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு,உளுத்தம்பருப்பு, பெருங்காயம், வரமிளகாயை தாளித்து கொண்டு அரைத்த விழுதை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி இந்த காயின்களை சேர்த்து மெதுவாக கிளறவும்.உப்பு மற்றும் எலுமிச்சை சாறு தேவையான அளவு சேர்த்து கிளறவும்.கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும். இது சென்னை பக்கம் செய்யும் பாரம்பரிய பலகாரம். அந்த காலத்தில் மாப்பிள்ளைகள் வந்தால் கண்டிப்பாக செய்வார்கள்.
Total Votes: 181
Total Views: 3932