Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: இனிப்பு சீயாளி & கார சீயாளி
Recipe by: S.sujatha sudhakar
Ingredients:
துவரம் பருப்பு ஒரு டம்ளர், பாசிப் பருப்பு கால் டம்ளர், இட்லி மாவு 3 கரண்டி, இட்லி மிளகாய் பொடி 4 ஸ்பூன், புளிகரைத்தது ஒரு குழிக்கரண்டி, உப்பு சர்க்கரை மஞ்சள்தூள் கருவேப்பிலை, தாளிக்க கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம், தேங்காய் துருவல் தேவையான அளவு, இனிப்பு செய்ய முந்திரிப் பருப்பு, தாளிப்பதற்கு எண்ணெய் நெய்
Procedure:
கார சீயாளி: ஒரு டம்ளர் துவரம்பருப்பு கால் டம்ளர் பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும் அதை கிரைண்டரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும் இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும் சிறிதளவு உப்பு..மூன்று கரண்டி வீட்டில் இருக்கும் இட்லி மாவு சேர்த்து கலந்து பின் இட்லி போல் வேக வைத்து எடுத்து ஆற வைக்கவும் பின் உதிர்த்துக் கொள்ளவும் ஒரு கனமான வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை தாளிக்கவும் உதிர்த்து வைத்துள்ள சீராளம் போட்டு அத்தோடு சிறிதளவு உப்பு இட்லி மிளகாய் பொடி 2 ஸ்பூன் ஒரு ஸ்பூன் சர்க்கரை மஞ்சள்பொடி துருவிய தேங்காய் மூன்று ஸ்பூன் புளிக்கரைசல் எல்லாம் நன்கு கலந்து சூடாகும் வரை கலக்கவும் சுவையான பாரம்பரியமிக்க சீயாளி ரெடி. இனிப்பு சீயாளி: முன்பு கூறியவாறு மாவு அரைத்துஅதில் குறைந்த அளவு உப்பு சேர்த்து இட்லி வைத்து வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும் ஒரு வாணலியில் நெய் ஊற்றி பொடித்த முந்திரி பருப்பு தாளித்து சர்க்கரை தேவையான அளவு போட்டு ஒரு கரண்டி தண்ணீர் விட்டு சர்க்கரை கொதித்து கரையும் வரை வைத்து தேங்காய்த் துருவல் போட்டுக் கலக்கவும் இதில் உதிர்த்த சீயாளி போட்டு நன்கு சூடாகும் வரை கலக்கவும் இனிப்பு சீயாளி தயார்
Total Votes: 412

Total Views: 2427