Recipe Name: அமர்த்தபலம்
Recipe by: C. Latha
Ingredients:
பச்சரிசி 2 டம்ளர் புளித்த மோர் 1 டம்ளர் தேங்காய் ஒரு மூடி பச்சை மிளகாய் 6 பெருங்காயம் ஒரு சிறிய ஸ்பூன் உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை சிறிதளவு கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்க எண்ணெய் 50 மி. லி
Procedure:
பச்சரிசி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
பின்னர்அரிசியுடன் புளித்தமோர்
தேங்காய் பச்சை மிளகாய் பெருங்காயம் உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்க வேண்டும் கறிவேப்பிலை அதில் போட வேண்டும்
அரைத்த மாவை தண்ணியா கரைத்து ஊற்ற வேண்டும்
அடிபிடிக்க விடாமல் நன்கு கலக்க வேண்டும்.
மூடிவைக்கவும்
பதினைந்து நிமிடங்களில் மாவு வெந்து விடும்
கையில் ஒட்டாத பதம் வந்ததும் கீழே இறக்கி வெள்ளைத் துணியில் சிறிது சிறிதாக வைக்க வேண்டும்
கை தாங்கும் சூட்டில் மாவை அடை போல் தட்டவும்
மேலே சிறிது நல்லெண்ணெய் தடவவும்.
புளிப்பு காரம் உப்பு என அனைத்து சுவைகளும் உள்ள அமர்த்தபலம் தயார்
Total Votes: 233
Total Views: 1698