Recipe Name: கந்தீப்பு ரொட்டை
Recipe by: A. Nagalakshmi
Ingredients:
இட்லி அரிசி 2 கப், துவரம்பருப்பு அரை கப், உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன், கொள்ளு 2 ஸ்பூன், தேங்காய் அரை மூடி, சிவப்பு மிளகாய் 10, சீரகம் அரை ஸ்பூன், பெருங்காயம் கால் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் அடை சுடுவதற்கு தேவையான அளவு, முட்டைகோஸ் அல்லது முருங்கைக்கீரை, அல்லது வாதரசி இலை (அடையில் கலந்து கொள்வதற்கு தேவையான அளவு)
Procedure:
அரிசி மற்றும் பருப்பு வகைகளை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும் அதனுடன் மற்ற அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும் அரைத்த மாவில் முட்டைக்கோஸ் அல்லது முருங்கை இலை அல்லது வாத அரசியலை இவற்றில் ஏதாவது ஒன்றை மாவுடன் கலந்து கொண்டு தோசை கல்லில் மாவை ஊற்றி அடைகளாக வார்த்து எடுக்கலாம் இப்பொழுது சுவையான சத்தமான அடை தயார் (இந்த அடை வைசியர்களின் பாரம்பரிய உணவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் சத்தான உணவு ஆகும் மேலும் இந்த அடை தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானவை ஆகும் உடலுக்கு தேவையான அளவு புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்றவை சமச்சீராக கிடைக்க இந்த அடை தயார்செய்து சாப்பிடலாம் இந்த அடை செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்)
Total Votes: 261
Total Views: 2307