Recipe Name: சம்பார ரொட்ட (சம்பார அடை)
Recipe by: N.Janani Dhamodharan
Ingredients:
தேவையான பொருட்கள்:- புழுங்கல் அரிசி - 2கப், துவரம்பருப்பு -1கப், மிளகாய் -15 (காரத்திற்கேற்ப), உப்பு - தேவையான அளவு, புளி-எலுமிச்சை அளவு, வெல்லம்-1/4 கப், கடலை பருப்பு-1/2 கப்.
Procedure:
செய்முறை:-
புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் மூன்று மணிநேரம் ஊற வைக்கவும். கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். புளியை கெட்டியாக கரைக்கவும். அரிசி மற்றும் பருப்பு ஊறிய பின் கிரைண்டரில் மிளகாய், அரிசி, பருப்பு சேர்த்து தண்ணீருக்கு பதில் கெட்டியாக கரைத்த புளி கரைசலை ஊற்றி ரவை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும். மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு தேவையான அளவு உப்பு, ஊறிய கடலைப்பருப்பு, துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். ஒரு வாழை இலையில் அல்லது பட்டர் பேப்பரில் மாவு உருண்டைகளை மெல்லியதாக அடை தட்டவும். அதன் நடுவில் சிறு துளை போட்டுக் கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தட்டி வைத்த அடையை மெதுவாக போட்டு சுற்றிலும் மற்றும் நடுவிலும் எண்ணெய் ஊற்றி மூடி போட்டு அடுப்பை சிறியதாக வைக்கவும். இருபுறமும் நன்கு வெந்த உடன் தட்டில் வைத்து ஊறுகாயோடு பறிமாறவும். சம்பார அடை தயார்.
Total Votes: 577
Total Views: 3421