Recipe Name: பப்பு ரொட்ட
Recipe by: B.Saipriya Jaiganesh
Ingredients:
*தோசைக்கு-புழுங்கல் அரிசி-2 டம்ளர்,உப்பு-தேவைக்கேற்ப,நீர்- தேவைக்கேற்ப*( 3 பேர் சாப்பிடும் அளவு) 6 விதமான வெரைட்டியில் தயார் செய்யலாம். 1.தக்காளி பப்பு ரொட்ட- வெங்காயம்-2, தக்காளி-3, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,கரம் மசாலா தூள், உப்பு.. 2.துவரம்பருப்பு பப்பு ரொட்ட-வேகவைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல், முந்திரி, பச்சை மிளகாய்... 3.இனிப்பு பப்பு ரொட்ட- பால், சர்க்கரை, தேங்காய் துருவல், முந்திரி 4.எலுமிச்சை பப்பு ரொட்ட- எலுமிச்சை பழச்சாறு, பச்சை மிளகாய் 5. புளி பப்பு ரொட்ட-உப்பு புளி கரைசல், காய்ந்த மிளகாய்,இட்லி பொடி 6.பூண்டு பொடி பப்பு ரொட்ட- பூண்டு பொடி, எலுமிச்சை சாறு பொதுவாக தாளிப்பு பொருட்கள்- எண்ணெய்,கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு,நெய், முந்திரி, கறிவேப்பிலை, கொத்தமல்லி
Procedure:
தோசை மாவுக்கு- புழுங்கல் அரிசி 4 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு,மீதம் கிரைண்டரில் ஒட்டியுள்ள மாவுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவி, அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்து நன்றாக கலந்து கொண்டே இருக்கவும்..5 நிமிடங்களில் கஞ்சி போல் மினுமினுப்புடன் தயார் ஆகும்.அதை அரைத்த தோசைமாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்...ரவை தோசை பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்...தோசைக்கல் காய்ந்த உடன், 1 கரண்டி தோசை மாவை சுற்றி ஊத்தி, கால் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அரை நிமிடம் மூடி வைத்து, பின் திறந்து தோசையை எடுத்து விடவும்... தோசையை திருப்பி போட வேண்டாம்... ஒவ்வொரு தோசையாக ஊற்றி எடுத்து, ஆறியதும், சிறு சிறு துண்டுகளாக பிய்த்து கொள்ளவும்...தோசை தயார்...
செய்முறை:
1.தக்காளி பப்பு ரொட்ட: வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சேர்த்து பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பிறகு அரைத்த தக்காளி விழுது சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும்.அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.மசாலா பொருட்களின் பச்சை வாசனை போன உடன் சிறு சிறு தோசை துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும்.தக்காளி பப்பு ரொட்ட தயார்!!!
2.துவரம்பருப்பு பப்பு ரொட்ட செய்முறை: துவரம்பருப்பு வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் சேர்த்து கடுகு,பச்சை மிளகாய், முந்திரி கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வேக வைத்து மசித்த துவரம் பருப்பை சேர்த்து, சிறிது உப்பு போட்டு நன்றாக கிளறவும். பிறகு அதில் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும். பருப்பு கலவை சிறிது கெட்டியானவுடன் அதில் சிறுசிறு தோசை துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். துவரம் பருப்பு பப்பு ரொட்ட தயார்!!!..
3. இனிப்பு பப்பு ரொட்ட செய்முறை: ஒரு வாணலியில் நெய் சேர்த்து காய்ந்ததும் முந்திரி போட்டு தாளித்து அதில் சிறிது பால் சேர்க்கவும் .பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும். சர்க்கரை கரைந்ததும் தேங்காய் துருவல் சிறிது சேர்த்து கிளறவேண்டும். பிறகு அதில் சிறுசிறு தோசை துண்டுகளைப் போட்டு கலந்துவிட வேண்டும். பால் சுண்டி தோசையில் சேர்ந்தவுடன் இறக்கிவிடவும். இனிப்பு பப்பு ரொட்ட தயார்!!!..
4.எலுமிச்சை பப்பு ரொட்ட செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு சிறுசிறு தோசை துண்டுகளைப் போட்டு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து, உப்பு போட்டு கலந்து விடவும். பிறகு பொடியாக அரிந்த கொத்தமல்லி சேர்த்து கலந்துவிட்டு இறக்க வேண்டும்.எலுமிச்சை பப்பு ரொட்ட தயார்!!!..
5.புளி பப்பு ரொட்ட செய்முறை:ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி அதில் உப்பு புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கரைசல் சுண்டியவுடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, அதில் சிறுசிறு தோசை துண்டுகளை போட்டு கிளறவும்.கடைசியாக சிறிது இட்லி பொடி சேர்த்து கிளறவும். புளி பப்பு ரொட்ட தயார்!!!..
6.பூண்டு பொடி பப்பு ரொட்ட செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதில் சிறுசிறு தோசை துண்டுகளை போட்டு பிறகு பூண்டு பொடி தேவையான அளவு சேர்த்து கிளறவும். கடைசியில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்துவிட்டு இறக்க வேண்டும். பூண்டு பொடி பப்பு ரொட்ட தயார்...
நண்பர்களே பாரம்பரியத்தை மறக்காமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்!!!
Total Votes: 351
Total Views: 2688