ஆர்ய வைசியர் வரலாறு – யநஸகுல (Yanasukula) கோத்திரம்

834

யநஸ குல, யாநஸககுல, யாநஸபிகுல, யானபகுல, யனபகுல கோத்திரம்

ஔசித்ய மகரிஷி எனும் சபர முனிவரின் வாரிசுகளே, உங்களின் ஔசித்யஸ கோத்திரத்தின் துணை பெயர்கள் யனசகுல, யானசககுல, யானசபிகுல ஆகியன ஆகும்.

கோடீஸ்வர சுவாமி

யனசகுல கோத்திரத்தார் வணங்க வேண்டிய தெய்வம் கோடீஸ்வர சுவாமி, இவர் நெல்லூர் மாவட்டத்தில் சேஜர்லா (Chejarla Mandal) அருகில் உள்ள கோடி தீர்த்தம் எனும் சிறிய கிராமத்தில் எழுந்தருளியுள்ளார்.

சிவபெருமான் கோடீஸ்வர சுவாமி ஆவார்.

கோடி தீர்த்தம் கோடீஸ்வர சுவாமி ஆலய கோபுர தரிசனம்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

ஆலய தல வரலாறு

தம் தாயை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெற வேண்டி தந்தை ஜமதக்னி முனிவரின் அறிவுரைப்படி கேரளா தொடங்கி கர்நாடகா, தமிழ்நாடு & ஆந்திரா உட்பட எல்லா இடங்களிலும் ஒரு கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தார்.

தன்னுடைய கடைசி லிங்கமான கோடியாவது லிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்ததால் இந்த இறைவனுக்கு கோடீஸ்வரர் என்ற பெயர் உருவானதாக புராண தகவல்.

கோடி சரஸ்

இந்த ஊரின் பெயரே கோடி தீர்த்தம், இங்கே கோடியாவது தீர்த்தம் பெண்ணா நதி எனும் பெண்ணாறு கலப்பதால் இந்த ஊருக்கு கோடி தீர்த்தம் என பெயர் வந்ததாக தகவல், மேலும் பரசுராமர் உருவாக்கிய கடைசி கோடியாவது லிங்கமாவதால் கோடீஸ்வரரின் தீர்த்தமான பெண்ணா நதி எனும் பிணாகினி நதியை கொண்ட ஊர் எனும் பொருளில் கோடி தீர்த்தம் என பெயர் வந்ததாகவும் பெயர்க்காரணம் கூறப்படுகிறது.

கோடிதீர்த்தம் அருள்மிகு கோடீஸ்வர சுவாமி ஆலயம் கூகுள் லோகேஷன்:

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group