கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 01

9200

குலம்

குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒரு மக்கட் குழுவாகும்.

குலம் இரண்டு வகைப்படும் – ஒன்று சமூகம் அல்லது பெரும் பிரிவு குலம்.

மற்றொன்று சிறுபிரிவு குலம், அதாவது குலமொன்றின் உறுப்பினர்கள், பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு பொது  முன்னோனைக் கொண்டிருப்பார்கள் அதாவது ஒரு பூட்டனையோ, கொள்ளுப் பாட்டனையோ அல்லது இன்னும் முற்பட்ட ஒரு முன்னோனையோ! பொதுவாகக் கொண்டிருக்கலாம். அவர்களின் வாரிசுகள் என்பது பொருள். ஆரிய வைசியர்களை பொறுத்தவரை கோத்திர முனிவர்க்கு பின் அந்த கோத்திரத்தைச் சேர்ந்த பெரும் சாதனை செய்த முனிவராக இருக்கும் ஒரு முன்னோனை கொண்டு அவர்களின் வாரிசுகள் என்று அடையாளம் கொள்ளும் வகையில் ரிஷிகுலம் என அழைக்கின்றனர். இது சிறுபிரிவு குலம்.

கோத்திரம்

அகராதியில் கோத்திரம் எனும் சொல்லுக்கு வம்சம் என்று பொருள். இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்த கோத்திரங்களை வகைப்படுத்துவதிலும், உருவாக்குவதிலும் முக்கியாமாக ஏழு ரிஷிகள் பெரும்பங்கு வகிக்கின்றனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர்.

கோத்திரம் என்பது இந்த பிரவர்த்தகர்கள் வழிவந்த ஏதாவது ஒரு ரிஷி அதனை உருவாக்கி வழிநடத்தியிருப்பார் எனவே அந்த ரிஷியின் பெயரையே கோத்திரமாக கொள்வதே சாஸ்திர விதி.

ஆரிய வைசியர்கள் எல்லோருமே ரிஷி பரம்பரையினர் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோத்திரம் உண்டு.

ஆண்களுக்கு மட்டும் தான் கோத்திரம் என்பது இல்லை. பெண்களும் தங்களின் கோத்திரத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின் கணவனுடைய வம்சத்தைச் சார்ந்தவர்களாகி, அந்த வம்ச சந்ததியை விருத்தி செய்பவர்கள் என்பதால் கணவனுடைய கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

ஆண்கள் கோத்திரம் திருமணத்தால் மாறுவதில்லை. ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்குத் தத்து (ஸ்வீகாரம்) அளிக்கப்பட்டுவிட்டால் அந்த வம்சத்து வாரிசாக மாறிடுவதால் அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவராகி விடுவதால் பிறந்த கோத்திரம் மாறிவிடும்.

யார் யாருடன் திருமணம் செய்யக்கூடாது?

ஆண் பெண்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கோத்திரத்தின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது. ஒரே கோத்திரத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கோத்திரத்திற்கு அல்லது பெண்ணின் கோத்திரத்திற்கு அன்னியமான கோத்திரத்தில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

பிரவரத்தில் உள்ள ரிஷியின் பெயர் ஆண், பெண் கோத்திரங்களில் ஒன்றாக இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை.

கோத்திரப்பொருத்தம்

உதாரணத்திற்கு ஆணின் கோத்திரம் மாரீச்சிச என்றும், பெண்ணின் கோத்திரம் மார்கண்டேய என்றும் கொள்வோம். மாரீச்சிச மற்றும் மார்கண்டேய கோத்திரங்கள் வேறு வேறு ரிஷிகள் என்றிருந்தாலும் இவர்கள் பார்க்கவ முனிவரின் வம்சத்தில் வந்தவர்கள் என்பதால் பிரவரத்தில் பகுதி ரிஷியின் பெயர் கட்டாயம் ஒன்றாக இருக்கும். ஆக, இந்த இரண்டு கோத்திரங்களைச் சார்ந்த ஆண் பெண்களுக்கும் திருமணம் செய்ய கோத்திரப் பொருத்தம் இல்லை.

விஞ்ஞான ரீதியிலேயே கோத்திரம்

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என ஒரு முதுமொழி உண்டு. அது ஏன்?

பெண் திருமணம் ஆகிக் கணவன் வீடு வருவதையும், அவளுக்குக் கணவனின் கோத்திரமே தான் கோத்திரமாக மாறுகிறது.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா?

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.  ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள்.

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.  ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.  இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.  இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை.

ஏனெனில் ஆணின் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக. முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.

பிரிவுகள்

ஆக குலம் என்பது கோத்திரங்கள் பலவற்றை கொண்ட மிகப்பெரும்பிரிவு எனவும், கோத்திரம் என்பது சிறுகுலங்கள் பலவற்றை கொண்ட பெரும் பிரிவு எனவும், சிறுகுலம் அல்லது துணை கோத்திரம் அல்லது சிறுகுலம் என்பது சிறுபிரிவு வகைபாடு எனவும் கண்டோம்.

ப்ரவரான் என்று வடமொழியில் அழைக்கப்படும் பிரவரத்தின் அடிப்படையில் எந்த கோத்திரத்தில் பிறந்தவர்கள், எந்த கோத்திரத்தாரை திருமணம் செய்யலாம்? அடுத்த பதிவில்….

விரைவில் சந்திபோம் – பென்னாகரம் Bala Venkatraman

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp