வருடம் ஒரு வாசவி கோவில்

1751

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்ட நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அவதரித்தார். சக்திவாய்ந்த ஶ்ரீ வாசவி தேவியின் தரிசனத்தை பெறுவதற்காக தமிழகம் முழுவதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களை வைஸ்ய பெருமக்கள் கட்டியுள்ளனர்.

ஶ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் தரிசனம் அனைத்து ஊர்களில் உள்ள வைஸ்ய குல மக்களுக்கும் தினமும் கிடைத்திட வேண்டும் என்னும் நோக்கில் முன்னாள் மாநில மகாசபா தலைவர் திரு. அஜந்தா சங்கர்ராவ் அவர்களின் தலைமையில் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி சேரிட்டபிள் & ட்ரஸ்ட் என்ற சமூக தொண்டு நிறுவனம் வருடம் ஒரு வாசவி கோவில் என்ற திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ஒரு வாசவி அன்னையின் ஆலயத்தை கட்டி தர இருகின்றனர்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக சென்னை அம்பத்தூரில் ஶ்ரீ வாசவி அன்னையின் ஆலயதிற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் மாதம், 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அழைப்பிதழ்:

ஜெய் வாசவி!!

மேலும் விழா மற்றும் திருப்பணி பற்றிய செய்தி தொடர்புக்கு:
திரு. T.N. குமார்,
Secretary – Activities,
Sri Kanyaka Paramesweri Charitable Trust,
+91 98410 41451

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group