ஆர்ய வைஸ்யர் சமூகத்தில் ஒரு மைல்கல் – Heroes of Aryavysyas

2772

Heroes of Aryavysyas – ஆர்ய வைஸ்ய வரலாறு புத்தகத்தின் ஆசிரியரும், வைஸ்ய இன ஆராய்ச்சியாளருமான திரு. பாலா வெங்கட்ராமன் அவர்களை பற்றிய ஒரு கட்டுரை.

கடந்த பத்து வருடங்களாகவே ஆர்ய வைஸ்யர்களை பற்றி பலவித சுவாராஸ்யமான வரலாற்று தகவல்களை சேகரித்து தருபவர் பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன். வாசவி அன்னையின் வரலாற்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்த அவரது பணி, இன்று ஆரிய வைஸ்யர் வரலாறுகளையும் நாம் அறிய வைத்துள்ளது.

சிவ பக்தராக என்றும் சிவ சிவ, திருச்சிற்றம்பலம் என்று உச்சரித்து கொண்டிருக்கும் இவரது வரலாற்று பதிவுகள் வாசவி அன்னையின் பிறப்பு காலம், வாசவி சமகாலத்தில் வாழ்ந்த மன்னன் மற்றும் அவனது குடும்பங்கள், ஆர்ய வைஸ்யர்கள் ஆதிகாலத்தில் உருவாக்கிய பதினெட்டு பட்டினங்களின் இன்றைய உண்மையான நிலை & பெயர்கள்.

பிரவரான்களின் அடிப்படையில் எந்த கோத்திரத்தார் எந்த கோத்திரத்தாருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆர்ய வைஸ்யர்களின் குடியேற்றம் என அனைத்து தகவல்களையும் நமக்கு அள்ளி தந்த தகவல் களஞ்சியமாக திகழ்ந்தவர்.

அவர் ஆர்ய வைஸ்ய சமயப்பணி மட்டும் செய்யவில்லை, சமூகப்பணியும் செய்து வருகிறார்.

ஆர்ய வைஸ்ய சமாஜத்தில் இவருடைய பங்கு

பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன் 2020-ம் ஆண்டு தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணியில் மண்டல நிர்வாகியாக அப்போதைய மாநில தலைவர் திரு.அனந்தராம்குமார் அவர்களின் அறிமுகம் மற்றும் வழிகாட்டுதலின்படி இணைந்தார். இந்த சந்திப்பு வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன் அவர்களுக்கு ஆர்ய வைஸ்யர் வரலாறு ஆய்வுக்காக வேர்களுக்கு விழுதுகளின் வணக்கங்கள் விருது வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை தனக்கு நல்கிய அப்போதைய மகாசபாவுடைய மாநில PRO திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், பண்ரூட்டி திரு. முத்துக்குமார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறார்.

மண்டல நிர்வாகியாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என மாவட்டம் முழுவதும் ஆர்ய வைஸ்யர்கள் இருக்கும் கிராம, நகரங்களை தேர்ந்தேடுத்து அங்கே மாவட்ட / நகர நிர்வாகிகளை தேர்வு செய்து இளைஞரணியை அமைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் மாவட்டம் தோறும் அவர் உருவாக்கிய இளைஞரணிகள் தோராயமாக…

தருமபுரி – 10 நகர அணிகள்
கிருஷ்ணகிரி – 28 நகர அணிகள்
திருப்பத்தூர் – 8 நகர அணிகள்
செங்கல்பட்டு – 12 நகர அணிகள்
காஞ்சிபுரம் – 7 நகர அணிகள்
திருவள்ளூர் – 22 நகர அணிகள்.

இது தவிர சென்னையிலும் இளைஞரணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரிய வைசிய சமாஜ உருவாக்கம்

இளைஞரணியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அங்கங்கே ஆர்ய வைஸ்ய நல்ல உள்ளங்களின் உதவி கொண்டு சமாஜங்களை உருவாக்கி/ இணைத்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு சமாஜங்களையும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலுசெட்டிசத்திரம், மாங்காடு சமாஜத்தையும்,

திருவள்ளூர் மாவட்டத்தில் மணலி, திருவூர் சமாஜங்களை உருவாக்கியுள்ளார். திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, ஆரணி (பாலவாக்கம், ஆரணி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, சூளைமேனி, தண்டலம்), திருவேற்காடு ஆகிய சமாஜங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை மாவட்டத்தில் மயிலாப்பூர் சமாஜத்தை உருவாக்கியுள்ளார், மாம்பலம்/திநகர், அரும்பாக்கம், சூளை/புரசைவாக்கம் சமாஜங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மகிளா விபாக்

பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன் அவர்கள் முன்னாள் மாநில மகிளா விபாக் தலைவர் திருமதி.பத்மாவதி இராம்தாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தருமபுரி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மகிளா விபாக் உருவாக முக்கிய பங்கு வகித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 மகிளா விபாக் அணிகள் உருவாக முக்கிய பங்கு வகித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மணலி ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் உருவாக முக்கிய பங்கு வகித்துள்ளார்.

வேலை வாய்ப்பு

ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக பணிபுரியும் ஐடி ஊழியரான பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன் அவர்கள் ஆர்ய வைஸ்ய ஐடி விங்க் (Arya Vysya IT Wing) எனும் தளத்தை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள ஆர்ய வைஸ்ய ஐடி பணியாளர்களை அதில் இணைத்து, வேலை தேடும் மற்றும் வேலை மாற்றம் எதிர்நோக்கும் கணினி அறிவியல் படித்த ஆர்ய வைஸ்ய இளைஞர் மற்றும் இளைஞிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் மொத்தம் 230 பேருக்கு வேலை வாய்ப்பை தனது IT Wing உதவியுடன் ஏற்படுத்தி தந்துள்ளார்.

ஜாதக மேளா

யூத்விங் ஜாதக மேளா (Youthwing Jathaga Mela) என்ற வாட்ஸ் அப் தளத்தை உருவாக்கி சுய ஜாதக பரிமாற்றம் செய்து கொள்ள உதவுகிறார்.

சுயவிவரங்கள்

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன் பரத்வாஜஸ கோத்திரம் பலிசெட்ல குலத்தில், 17 ஏப்ரல் 1986-ல் தருமபுரியில் பிறந்தவர். இவர் தந்தை பலிசெட்ல பென்னாகரம் MVM.சுந்தரம் செட்டியார் மகன் சுங்கா திரு.வெங்கட்ராமன் செட்டியார், தாயார் மிதுனகுலத்தை சேர்ந்த கடத்தூர் திரு.சுந்தரம் செட்டியார் மகள் திருமதி.சியாமளா அம்மாள்.

இளம் வயது பள்ளிகல்வியை பென்னாகரம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த இவர், தனது தமக்கையின் உதவியாலும் பொருளாதார வழிகாட்டுதலாலும் இளகலை படிப்பை தருமபுரியில் முடித்து, தனது MCA படிப்பை சென்னை பல்கலைகழகத்தில் முதல் வகுப்பில் பயின்று முடித்தார்.

தமிழ் மேல் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக தமிழ் MA படிப்பை தொலைதூர கல்வியில் முடித்தார், உளவியலில் ஆர்வம் கொண்டுள்ள இவர் MA Psychology பயின்றுவருகிறார்.
அவர் தனது பணி காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்தவர்.

2017-ல் பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை மைத்ரகுலத்தை சேர்ந்த திரு.நாகராஜன் செட்டியார் அவர்களின் மகள் கிருத்திகாவை மணமுடித்து தற்போது ஸ்ரீசிவன்யா என்ற அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

சிவ திருப்பணி

சைவ சமயத்தில் பெரும்பற்று கொண்டுள்ள இவர், சிவனடியார்களுடனும், ஆர்ய வைஸ்ய ஆன்மீக அன்பர்களுடனும் இணைந்து அடிக்கடி சிவாலய திருப்பணிகளை செய்து வருகிறார்.

உழவார பணிகளை செய்தல், அன்னதானம், தீப எண்ணை தருதல், கும்பாபிஷேக பணிகளில் உதவுதல் என தன்னால் இயன்ற ஆன்மீக திருப்பணிகளை செய்து வருகிறார். இவரும் இவர் குடும்பமும் இறைவன் திருவருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.

2 COMMENTS