BRICS CCI உலக தூதராக நியமிக்கப்பட்டுள்ள Vysya Youth Icon – “ஸ்ரிஷ்டி ஜூபுடி”

1606

வைஸ்ய சமுதாயத்தை சேர்ந்த இளம் சாதனையாளர் ஸ்ரிஷ்டி, தனது 20-வது வயதிலேயே உலக அரங்கில் பல சாதனைகளை புரிந்து ஆர்ய வைஸ்ய சமூக மக்களின் யூத் ஐகானாகவும், பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்கிறார். அவரின் சாதனைகள் சில உங்கள் பார்வைக்கு.

BRICS CCI  என்பது சர்வதேச அமைப்பாகும். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்ப்ரிகா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கியதாகும். 2021 பிரிக் மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது.

2017 , 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியா மற்றும் கனடா நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பூப்பந்து போட்டிகளில் ஸ்ரிஷ்டி அவர்கள் வெற்றி பெற்று, 135 கோடி மக்களின் பிரதிநிதியாக இந்திய கொடியை உயர்த்தி பிடித்துள்ளார். 

ராஜா ஜூபுடி மற்றும் மாதுரி ஜூபுடி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மாதுரி அவர்களும் பூப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். பல சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார். இப்பொழுது அவருடைய வழியை பின்பற்றி அவரது மகள்  முத்திரை பதித்து வருகிறார். எட்டு வயதில் பூப்பந்து மைதானத்தில் காலடி வைத்த அவர், சர்வதேச வீரர் புல்லேலா கோபிசந்த் அவர்களால் மெருகேற்றப்பட்டார். 2011 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் தன் முதல் வெற்றியை பெற்றார். இதன் பின் தினமும் 8 முதல் 12 மணி நேரம் தொடர் பயிற்சி மூலம் தொடர் வெற்றிகளை கண்டார். 

புதிய இலக்கு…

விளையாட்டில் சோபித்த ஸ்ரிஷ்டி, படிப்பிலும் கெட்டிக்காரர். கீதம் பல்கலைகழகத்தில் இராண்டாம் ஆண்டு பொறியியல் இள நிலை படிக்கும் இவர், மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை வென்று தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார்.

படிப்பு, விளையாட்டு தவிர சமூக பணியிலும் முன்னிலை வகிக்கிறார். இப்பணிகளில் கவனம் செலுத்தி பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்னும் நோக்கில் தன்னுடைய விளையாட்டினை துறந்தார்.

பின்னர், ஹாபிடட் ஹுமானிட்டி என்ற சர்வதேச அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பில் பிரபல நட்சத்திரங்கள் ஜான் அப்ரகாம், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் ஆகியோர் தூதராக உள்ளனர்.

BRICS தூதராக….

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள், அரசியல், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றில் முன்னேற்ற பாதை அமைத்துக் கொள்ள ஒருங்கிணைப்பே பிரிக்ஸ் எனப்படும். இந்த அமைப்பிற்கு ஸ்ரிஷ்டி தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பல லட்ச இளைஞர்களுக்கு வழிகாட்டியாக தன்னை தயார்படுத்திக் கொள்கிறார். இதன் மூலம் குறைந்தது பத்து லட்ச இளைஞர்களை ஊக்குவிக்க இலக்கு அமைத்துள்ளார்.  

தன் விளையாட்டிலிருந்து விலகும் போது, கலப்பு இரட்டையர் பிரிவில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருந்தார். சர்வதேச அளவில் 74-வது இடத்தில் தொடர்கிறார். 

என் அனுபவமே என் பாடம் (அவரின் வார்த்தைகளில்): 

“ உலகிலேயே இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகம். ஆனால் இவர்கள் பல சவால்களை சந்திக்கின்றனர். சர்வதேச அரங்கில் ஈடுகொடுக்க முடியாமல் கடும் மன உளைச்சலில் உள்ளனர். என்னுடைய பத்து வருட விளையாட்டு வாழ்க்கையில் பல சமயங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதன் பின்விளைவுகளை நாம் நன்கு அறிவோம். என் அனுபவங்களை இளைஞர்களுக்கு பகிர தீர்மானித்துள்ளேன், முக்கியமாக பெண்களுக்கு! தலைமை பண்பு தவிர தன்னிறைவு பெற்றவராக அவர்களை உருவாக்குவதே  எனது இலக்கு என்று கூறுகிறார்.

BRICS சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சர்வதேச தூதுவராக (2021-2022) இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைப்பின் அறிவிப்பின் படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த பொறுப்பை  வகிக்கிறார்.

All the Best Srishti!  Keep inspiring us!!

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group