தங்க நகை வியாபாரத்தில் புரட்சி செய்த தங்க மனிதர்

9820

இந்தியாவிலேயே முதன்முறையாக தங்க நகை வியாபாரத்தில் ஒரு புதிய யுக்தியை புகுத்தி புரட்சி செய்தவர் ஒரு வைஸ்யர் என அறியும் போது உங்கள் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா!

ஆம், இந்தியாவிலேயே முதன்முறையாக தங்கம் கடையில் வாங்கும் ஆபரணத்தில் தங்கம் கடையின் பெயரை பொறித்து (Seal) விற்று, மீண்டும் எங்கள் கடையிலேயே நீங்கள் வாங்கிய ஆபரணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் விற்கலாம், நாங்களே வாங்கிக்கொள்கிறோம் (buy back guarantee system) என்கிற புதிய முறையை இந்தியாவிலேயே முதல் முறையாக கோயமுத்தூரில் அறிமுகப்படுத்தி நகை வியாபாரத்தில் பெரும் புரட்சி செய்தவர் திரு. P.A.ராஜு செட்டியார் அவர்கள்.

அப்பப்பா… அவரின் வாழ்க்கை வரலாறு ஒரு சாதனைப் பெட்டகம் ஆகும். நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இவர்தான் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய தக்க்ஷணகண்ட மகா சபாவின் முதல் தலைவராக திகழ்ந்து சிறப்பாக பணிபுரிந்தவர்.

இவர்தான் ஸ்ரீ வாசவி புராணத்தை ஆனத்தூர் பாலகவி வேங்கிடராமன் அவர்களை கொண்டு முதன் முறையாக தமிழில் வெளிவரக் காரணமாக இருந்தவர்.

வைஸ்ய பூஷணம், வைஸ்ய சிரோன்மணி மற்றும் கோவை வள்ளல் என்றும் பாராட்டு பெற்றவருமான P.A.ராஜு செட்டியார் அவர்களைப்பற்றி ஒவ்வொரு வைஸ்யரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இவர் 1895ஆம் ஆண்டு பழனியில் அழகிரிசாமி செட்டியாருக்கும், சுப்புலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தன் பாலபருவத்திலேயே தந்தையை இழந்த இவர் தன் தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். தன்னுடைய 17 வயதில் தன் குடும்பத்தாருடன் கோயமுத்தூர் வந்து சேர்ந்த இவர், நகை வியாபாரத்தில் ஈடுபட்டார். கடினமாக உழைத்தார். முதலில் வியாபாரத்தில் சில ஏமாற்றங்களைச் சந்தித்தார்.

ஆனால் இவரின் தாய் இவருக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள் இவருக்கு மிகப்பெரிய சக்தியாக விளங்கியது. விடா முயற்சியைத் தொடர்ந்தார். தாயின் அறிவுறுத்தலின் படி தினமும் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தார். நம்பினோர் கெடுவதில்லை என்கிற வாசகத்தை மனதில் நிறுத்தினார். தன் சகோதரர் ராமசாமி அவர்களுடன் இணைந்து 1917ஆம் ஆண்டு P.A.Raju chettiyar & Brothers என்கிற பெயரில் தங்க நகை மொத்த உற்பத்தி மற்றும் சில்லரை வியாபாரத்தை ஆரம்பித்தார்.

அப்பொழுதுதான் இந்தியாவில் யாரும் செய்யாத வகையில் முதல் முறையாக தங்கள் கடையின் PAR (P.A.Raju) முத்திரையைப் பதித்து buy back guarantee scheme திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்தது. மிகத்தரமான தங்கத்தால் நகை செய்து விற்றதால் வியாபாரம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது.

தங்க நகை மட்டுமல்லாமல் வெள்ளியால் இதுவரை யாரும் செய்யாத பல பொருட்களை செய்து விற்றார்‌. எனவே அந்த வியாபாரத்திலும் பெரும் வெற்றி பெற்றார்.

கடையை பார்த்தாலே உள்ளே சென்று பொருட்களை வாங்கத்தூண்டும் வகையில் அழகுற அமைத்தார். அக்காலத்திலேயே தானாக சூழலும் show case அமைத்தார். இது மக்களை வெகுவாக கவர்ந்தது. திரைப்படங்கள் வந்த பிறகு திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு தன் கடைக்கு விளம்பரம் செய்து மேலும் வியாபாரத்தை பன்மடங்காக்கினார். இந்த யுக்தியைதான் பின்னர் பல பிரபல நகைக்கடைக்காரர்களும் பின்பற்றினர்.

இவரின் கடையைப் பற்றிய விளம்பரங்கள் அன்றைய தினசரிகளில் வராத நாளே இல்லை எனக் கூறலாம்.

விற்கும் நகைகளை மிகவும் அழகான வகையில் pack செய்து தந்து வாடிக்கையாளர்களை கவர்ந்தார்.

நகை வியாபாரம் மட்டுமல்லாமல் மேலும் பல தொழில்களிலும் தன் கவனத்தைச் செலுத்தினார்.

திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்திலும் ஈடுபட்ட இவர் கோயமுத்தூர் ராஜா திரையரங்கத்தின் உரிமையாளரும் கூட.

மேலும் கோயமுத்தூர் பாக்கிய லக்ஷ்மி வங்கியை நிறுவினார். இது பின்னாளில் கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்ததாம்.

பல நகை வியாபாரிகளின் சங்கத்திற்கு தலைவராக திகழ்ந்தார். மேலும் கோயமுத்தூர் மற்றும் தமிழகத்திலுள்ள பல கன்னியகா பரமேஸ்வரி ஆலயத்தின் மேம்பாட்டிற்கு தாராளமாக நன்கொடைகள் தந்தார். எனவே வைஸ்ய வள்ளல் என்கிற பட்டம் இவரைத் தானாக தேடி வந்தது.

இவரின் சாதனைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும் தங்க நகை வியாபாரத்தில் புரட்சி செய்த இந்த தங்க மகனின் வெற்றிக்கு முதன்மையான காரணம் செய்யும் தொழிலில் நேர்மை, புதுமை, கடவுள் நம்பிக்கை இதற்கும் மேலாக தன் தாயைத் தெய்வமாக பாவித்து அவரின் அறிவுரைப்படி அதீத தெய்வ நம்பிக்கையோடு வாரி வாரி வழங்கி மற்றவர்களின் மகிழ்ச்சியில் இறைவனைக்கண்டதே ஆகும் எனக்கூறுகிறார் இவரின் மூன்றாம் தலைமுறை பேரனும் பல ஆங்கில கட்டுரைகளை பத்திரிக்கையில் எழுதிவரும் Historian திரு. ராஜேஷ் கோவிந்தராஜூலு.

தமிழக ஆர்ய வைஸ்யர்களின் காவியத்தலைவனாக விளங்கிய இவரின் புகழ் சூரியன் சந்திரன் இருக்கும் வரை என்றும் நிலைத்திருக்கும்.

இனிமேல் ஒவ்வொரு வருடமும் வரும் ஜனவரி 28ஆம் தேதியை நகை வியாபாரிகள் தினமாக (Jeweller’s day) கொண்டாடுவதே நாம் அந்த மகானுக்குச் செய்யும் அஞ்சலியாகும்!

அந்த இனிய நாள் இதோ வந்துவிட்டது.

பண்ருட்டி சொ.முத்துக்குமார்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group