உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் ஒன்பதாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.
Click here to get the 8th Tip Shared by the Doctor for Healthy Living
பருவ கால உணவு
நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் உண்ணும் உணவுகளை அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்றாற் போல் உட்கொள்வது சிறப்பு.
ஏனெனில் பருவ கால மாற்றங்கள் நம்முடைய உடலின் வெப்பநிலையையும் மற்ற செயல்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்கு ஈடுசெய்யும் வகையில் நாம் உணவுகளை எடுத்துக் கொண்டால், ஆரோக்கியமாக இருக்கலாம்!
What to have? When to have??
சித்திரை மற்றும் வைகாசி
கசப்பு, காரம், துவர்ப்பு சற்று கூடியதாக உள்ள உணவு ஏற்றது. நெய், கொழுப்புச்சத்து உள்ள உணவை குறைக்கவும்.
ஆனி மற்றும் ஆடி
நெய் முதலிய கொழுப்புச்சத்துக்கள் கூடிய உணவுகளையும். குளிர்ச்சி, இனிப்பு சேர்த்ததுமான உணவு வகைகளையும் சாப்பிடுவது நல்லது.
ஆவணி மற்றும் புரட்டாசி
புளிப்பு, உப்புச்சுவை கூடிய உணவுகளையும், கொழுப்புச்சத்துகள் மிதமான உணவு வகைகளும் சாப்பிடுவது நல்லது. இக்காலத்தில் ஜீரணம் ஓரளவு மிதமாகவே இருக்கும்.
ஐப்பசி மற்றும் கார்த்திகை
கொழுப்புச்சத்து, இனிப்பு, புளிப்பு கூடிய உணவு வகைகளே ஏற்றவை, வெந்நீரை குடிப்பது நல்லது.
மார்கழி மற்றும் தை
கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத, குளிர்ச்சியடைய உணவு வகைகளை சாப்பிடலாம். துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகள் உள்ள உணவுகள் இக்காலத்தில் உட்கொள்வது நல்லது.
மாசி மற்றும் பங்குனி
குளிரும் வெயிலும் இதமாக இருக்கும் இக்காலத்தில் ஜீரணம் விரைவில் ஆகும். கொழுப்புச்சத்தும், நெய்பசையுமுள்ள உணவை ஏற்கலாம். இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை கொண்டவற்றை உண்ணலாம்.
Take care of your Health 😇
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group