உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் நான்காவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.

Click here to get the 3rd Tip Shared by the Doctor for Healthy Living

Day 4 – Do’s and Dont’s during Oil Bath

எண்ணெய் தேய்த்து குளித்தல்

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நல்லெண்ணையை பயன்படுத்த வேண்டும், எண்ணெய் தேய்க்கும் பொழுது எண்ணெய்யை ஒவ்வொரு காதிலும் மூன்று துளிகளும் ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டு துளிகளும் விட்டு பின் தலை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மெதுவாக தேய்க்கவும்.

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15 முதல் 30 நிமிடம் வரை ஊற வைத்து பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதிகாலையில் 6.30 மணிக்குள் குளித்து முடித்து விடவேண்டும்.

எந்தெந்த நாட்களில் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்

👨🏻‍🦰 ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்

👱🏻‍♀ பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என சித்த மருத்துவம் கூறுகிறது.

எண்ணெய் குளியல் அன்று செய்ய கூடாதவை

  • பகல் தூக்கம் கூடாது
  • வெயிலில் அலைய கூடாது
  • உடலுறவு கூடாது
  • அதிக உழைப்பு கூடாது
  • மாமிச உணவுகளை தவிர்க்கவும்

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group