Know the Interesting Facts About விநாயகர்

4340

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்த நன்னாளில் விநாயகரின் பெயருக்கான காரணங்கள், விநாயகர் உருவத்திற்கான காரணங்களை தெளிவாக காண்போம்.

விநாயகன்

நாயகன் – என்றால் தலைவன், வி – என்றால் இணையான. அதாவது தனக்கிணையில்லாத நாயகன் இல்லாததால் விநாயகன் என அழைக்கப்படுகிறார் விநாயகர்.

ஞானத்தை குறிக்கும் விநாயகரின் தத்துவார்த்த புகைப்படம்

பிடித்து வைத்த பிள்ளையார் போல

சிவபெருமான் வருகையை உணர்ந்த பார்வதி தான் தினகும் குளிக்கும் குளக்கரையில் குளித்து நறுமணத்துடன் சிவத்தை வரவேற்க எண்ணினாள். அதனால் குளத்தின் கண் இருக்கும் மஞ்சளை பிடித்து சிவபெருமானை தியானித்து தனக்கு ஒரு மைந்தன் வேண்டும் என பிரார்த்திக்க. பிடித்து வைத்த மஞ்சளிள் அச்சு அசல் பிசகாமல் பிள்ளையார் உருவானார்.

இதனால் தான் பிடித்து வைத்த பிள்ளையார் போல என பழமொழி உருவானது. அது சரி பிள்ளையார் எனும் பெயர்க்காரணம் வர ஒரு நிகழ்வு இருக்குமல்லவா??

பிள்ளையார்

தவத்தின் பொருட்டு சென்ற ஈசனை நெடுநாள் கழித்து பார்க்க இருப்பதால், வாசனை திரவியங்களுடன் முகமலர வரவேற்க எண்ணிய பார்வதி அன்னை, தன் ஏகாந்தமாய் குளிக்கும் குளத்தின் கண் இருந்த மஞ்சளை பிடித்து விநாயகரை உருவாக்கினார், பின் தான் உருவாக்கிய பிள்ளையை தன் அந்தபுரத்தை காவல் காக்கும்பொருட்டு யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார்.

விநாயகர் காவலிருக்கும் சமயம் தன் மனைவியை காண வந்த சிவனார், அங்கே ஒரு பிள்ளை காவலிருப்பதை கண்டு இந்த பிள்ளை யார் என தனக்குள் கேட்டுக்கொண்டு, பிள்ளை யார் நீ என விநாயகரிடம் கேட்டார். இவ்வாறு சிவமே பிள்ளை யார் நீ என கேட்டதால் அச்சொல்லே மருவி பிள்ளையார் எனும் பெயரானது.

பிறபெயர்கள்

சிவபெருமானுடைய பூதங்கணங்களுக்கு தலைவனானதால் கணநாதன் என்றும், கணபதி எனவும் அழைக்கப்படுகிறார். வேதம் நான்கையும் ஒவ்வொரு கையிலே ஏந்தி, தும்பிக்கை ஒரு கையாகவும் கொண்டுள்ளதால் ஐந்துகரன் அல்லது ஐங்கரன் என அழைக்கப்படுகிறார்.

இதனை யோகமுறையான ஆன்மீக மார்க்கத்தில் பார்க்கும்போது, கண், வாய், செவி, காது, மூக்கு என ஐந்து பொறிகளையும் அடக்கிய ஞான நிலையில் இருப்பதால் விநாயகனை ஐங்கரன் என அழைக்கின்றனர்.

இவருக்கு யானைமுகன் என்ற பெயர் உண்டு. யானை முகன் என்பது குறியீடுதான் அதாவது யானை முகன் எனும் சொல்லில் யானை என்பதை பிரித்தால் யானை = ஆ + நெய், ஆன்மாவின் நெய் என்று பொருள். குண்டலினி யோகத்தை தொடர்ந்து செய்கையில் மேல் நாக்கின் மேல் பகுதியில் ஒருவித சுரப்பி சுரக்கும் இதை ஆன்ம நெய் என்பர் யோக நெறியில் உள்ளவர்கள். இதனை பீனியல் சுரப்பி என அறிவியல் பெயரால் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆ + நெய் தலையுடன் விநாயகப்பெருமான், ஆணவத்தலை அழிந்த பின்

இந்த ஆனம நெய் சுரப்பவர்கள் முகதேஜஸ் ஒப்பிட முடியாத அழகினை உடையது, இதனை தெய்வ காடாட்சம் என்பர். இப்படி ஆன்ம நெய் அதிகமாக சுரக்கும் ஞானத்தின் இருப்பிடமாக தெய்வீக முகத்தினை உடையதால் ஆ + நெய் முகத்தான் என்பது ஆனை முகத்தான் என மருவி அதுவே யானை முகத்தான் என ஆனது.

குறிப்பாக விநாயகருக்கு மனித தலைக்குப் பதிலாக யானை தலை வந்த புராண நிகழ்வுக்கு பின்னும் பெரிய ஆன்ம அநுபூதி இருப்பது சற்று உற்றுப்பார்த்தால் தெரியும்!!

மனித தலையுடன் ஆதி விநாயகர், இடம் – செதலபதி

தத்துவார்த்தம்

பார்வதி எனும் ஆன்மா, சிவத்தை கண்டு உணர தன்னை பண்படுத்தும் முயற்சியில் விநாயகன் எனும் குண்டலினி யோகம் செய்யும்போது அங்கே இடையறாத பெரும் போராட்டத்தில் சிவபெருமானின் அருளால் ஆணவம் எனும் மனித தலை அழிந்து, ஆன்ம நெய் எனும் தெய்வ தலை தோன்றுகிறது. இதுவே புராணம் கூறும் சிவ தத்துவார்த்த உணரல்!

விநாயகரின் இந்த நன்னாளில் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

Author – பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Feature Image credits – Coimbatore Mrs. Lakshmipriya Sreedharan