அயோத்தியில் ஆர்ய வைஸ்யர்களின் சேவை

3532

ஸ்ரீ ராம ஜென்ம பூமியான அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அன்றைய தினம் கர்ப்ப கிரகத்தில் மூலவரான ராம் லல்லா சிலை 500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைக்கப்பட்டது.

நாம் வாழும் இந்த காலகட்டத்தில் நடக்கும் இந்த சரித்திர நிகழ்வில் அயோத்தியா ஆர்ய வைஸ்ய சேரிடபுள் பவுண்டேசன் மற்றும் SVAC பவுண்டேசன் குழுவினர், அயோத்தியில் தினசரி வருகை புரியும் ராம பக்தர்கள் உணவு உண்ணும் வகையில் ஜனவரி 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அயோத்தியா தஷ்ரத் மஹாலில் அன்னதானம் வழங்கி கொண்டு உள்ளனர்.

உன்னதமான சேவை

அன்னதானத்திற்காக சென்னையிலிருந்து உணவுப் பொருட்கள் லாரியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த உன்னத செயலை ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் புரிய இருக்கும் ஆர்ய வைஸ்ய குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Location of Annadhanam in Ayothya:

Thanks to Mr. K. Ravikumar, President – AVCEF

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group