வைசியர்கள் கொண்டாடிய வைகுண்ட ஏகாதசி துவாதசி பாரணை பூஜை

1848

ஆரிய வைசியர் வரலாறு – ஆரிய வைசிய பூஜைகள்

நம் வைஸ்ய பெரியவர்களால் காலம் காலமாக கொண்டாடபட்டு வந்த துவாதசி பாரணை பூஜை அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

சில வைணவ பெரியவர்கள் இதை ஒவ்வொரு ஏகாதசி அன்றும் கடைபிடிக்கிறார்கள்.

சில வைசியர்கள் இதை வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் கடைபிடிகிறார்கள்.

வைகுண்ட ஏகாதசி அன்று விரதமிருப்பவர்கள் மறுநாள் துவாதசி காலை துயில் எழுந்து குளித்து பெருமாள் பூஜை செய்து. துளசி தீர்த்தம் உட்கொண்டு அதன்பின் அகத்தியக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியன அடங்கிய உணவுகளை உட்கொண்டு விரதத்தை முடித்து கொள்வார்கள். இதனை துவாதசி பாரணை என்று கூறுவார்கள்.

துவாதசி பாரணை பூஜை மகிமை

இதில் அகத்தியக்கீரை சிவனின் அம்சமாகவும் அட்டமா சக்திகளை தரும் போதி சக்தியாகவும், நெல்லிக்காய் மகாலட்சுமியின் அம்சமாகவும் சகல சம்பத்துக்களையும் தரும் பொருளாகவும். சுண்டைக்காய் சரஸ்வதியின் அம்சமாகவும் ஆத்ம சுத்தியை வழங்கும் பொருளாகவும் இருப்பதால் இதை மூன்றையும் சேர்ந்து உண்ணும் போது ஏற்படும் கிரகிக்கும் சக்தியை ஏற்கனவே வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்த உடலானது முழுவதும் பெற்றிருக்கும். அதனால் உடலுக்கு ஞானம். போகம் என இரண்டு வித சக்திகளும் கிடைக்கிறது.

இந்த சம்பிரதாயங்கள் அனுஷ்டிக்கும் விதிகள் பற்றி வேதாந்த சாஸ்திரத்தில் கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

துவாதசி பாரணையில் கடைபிடிக்க கூடாத சில விதிகள் உள்ளன அதை பற்றி பூர்வ மீமாம்சை எனும் சாத்திரத்தில் ஜைமினி முனிவர் வழங்கியுள்ளார் அது என்னவென்றால்…

வாழை சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும்.. வாழைஇலையில் உட்கொள்ள கூடாது.

கத்திரி, புடலைங்காய், பாவக்காய் ஆகியன தவிர்த்தல் வேண்டும்.

கடலை துவரம் உளுந்து பருப்புகள் தவிர்த்தல் வேண்டும்..

கடுகு மிளகாய் கொத்தமல்லி தனியா புளி ஆகியன தவிர்த்தல் வேண்டும்.

எள் நல்ல எண்ணை/ கடலை எண்ணை ஆகியன தவிர்த்தல் வேண்டும்.

கொடுத்த வாக்கினை மாறுபவர்கள் மறந்தும் இந்த வைகுண்ட ஏகாதசி துவாதசி பாரணை செய்யக்கூடாது என்பது சாஸ்திர விதி. அவ்வாறு செய்தால் அவர்கள் குலமே அவர்களை அழிக்கும்படி செய்துவிடுமாம் இதை உத்திர மீமாம்சை எனும் சாஸ்திரம் தெளிவாக குறிப்பிடுகிறது.

துவாதசி பாரணை பூஜையில் அனுசரிக்க வேண்டியவைகள்:

வாழை இலைக்கு பதிலாக தாமரை இலை/ பாக்கு மட்டையில் உணவு உண்ண வேண்டும்..

நெய்யிலோ அல்லது தேங்காய் எண்ணெயில் உணவு சமைக்க வேண்டும்..

முதலில் பிரம்மச்சாரிகளுக்கு, பின் ஏழைகளுக்கு அதன் பின் அனாதைகளுக்கு உணவளித்து பின்னர் தான் நாம் உணவு உட்கொள்ள வேண்டும்.

அனுசரிக்க வேண்டிய வைசிய குல கோத்திரங்கள்

துவாதசி பாரணை பூஜையை கீழ்கண்ட நம் வைசிய குல கோத்திரத்தார் பின்பற்ற வேண்டியது அவசியம்…

குறிப்பாக நம் வைசியர்களில் மிதுன மைத்ர குல, நாபிள்ள குல, எலிசெட்ல, புதனகுல, வெண்ணகுல, வினுகுல, மோர்குல, பத்மசெட்ல, சந்திரகுல, மவுஞ்சிகுல, சிரிசெட்ல, பீமசிஷ்ட, விபரிசெட்ல, வசந்தகுல, தனந்தகுல, காமிசெட்ல, கொண்டகுல, ஸ்ரீலகுல, இலமஞ்சி குல, சாணகுல, டங்காரகுல, சாமிசெட்ல, ரெண்டகுல, புச்சகுல, ப்ரோவுட குல, ஹஸ்தகுல, கொரட்டகுல கோத்திரத்தார் அனைவருக்கும் இந்த விரதத்தை அனுசரிக்க வேண்டும்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Author – பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group