தமிழக அரசியலில் ஆளுமைமிக்க வளரும் தலைவர்களாக கலக்கும் வைஸ்ய சமூகத்தை சார்ந்த இரு நண்பர்கள்!

9120

நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் இன்று ஒரு கட்சியின் முக்கிய பொறுப்புகளை அலங்கரிப்பது நம் சமூகத்திற்கு பெருமை.

ஜி.பிரதீப் மற்றும் எஸ்.ஜி சூர்யா இருவரும் கோவையில் பிறந்து வளர்ந்து இன்று ஒரு கட்சியின் ஆளுமை மிக்க வளரும் தலைவர்களாக மாறியிருக்கிறார்கள்.

அவர்கள் கடந்து வந்த பாதை:

கோவையில் உள்ள நம் வாசவி வித்யாலையா பள்ளியில் தங்களின் பள்ளி படிப்பை தொடங்கிய இவர்கள் மிக இளம் வயதிலேயே தங்களின் தனித்திறமைகளால் தனித்துவம் மிக்க மாணவர்களாக திகழ்ந்தனர். பள்ளியின் சார்பில் நிகழும் பலதரப்பட்ட போட்டிகளிலும் பங்கேற்பது, மாணவர்கள் குழுக்களை வழிநடத்துவது என மழலையாக இருந்த போதே இவர்களுக்குள் மாசற்ற தலைமைபண்பு தலைத்தோங்கியிருந்ததை இன்றும் வாசவி வித்யாலையா பள்ளியின் ஆசிரியர்களும், நண்பர்களும் வியந்து சொல்வதுண்டு.

வாசவி வித்யாலயா மேல்நிலை பள்ளி வளாகம்

பள்ளி பருவத்திலேயே மாணவர் தலைவராக இருந்தவர் எஸ்.ஜே சூர்யா, நண்பரோடு தோள் நின்றவர் பிரதீப். அந்த வளரிளம் பருவத்திலேயே தனித்துவமான திட்டங்களை பள்ளியில் புகுத்தியவர்கள். இளைஞர் பாராளுமன்றம் அமைத்தல், தமிழ், ஆங்கிலம் என் பல்வேரு சங்கங்கள் அமைத்தல் என பல புதிய புதுமைகளை அப்போதே தொடங்கியவர்கள் இவர்கள்.

பிரதீப் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியிலும், சூர்யா பி.எஸ்.ஜி கலை கல்லூரியிலும் தத்தம் இளநிலை படிப்படி பயின்றனர். கல்வியின் பாதையில் இருவேறு கிளைகளை இருவரும் தேர்வு செய்திருந்தாலும், சிந்தனையில் ஒன்றாக பயணித்தவர்கள் என்பதால் “யூத் ஹெல்பிங் ஹெண்ட்ஸ்” என்ற சமூக சேவை அமைப்பில் இருவரும் சேவை செய்து வந்தனர். பின்பொரு கட்டத்தில் நாமே ஏன் இது போன்ற ஒரு லாப நோக்கமற்ற அமைப்பை தொடங்க கூடாது? என்ற சிந்தனையில் இவர்கள் தொடங்கியது தான் “சிக்ஸ்த் சென்ஸ்” பவுண்டேஷன். இந்த சிந்தனை உதித்த போது அவர்கள் யாருக்கும் இன்னும் 18 வயது கூட பூர்த்தியாகி இருக்கவில்லை. எனவே அந்த வயது பூர்த்தியாகும் நாள் வரை காத்திருந்து இந்த அமைப்பை பதிவு செய்தனர். பின்னர் கோவை முழுவதிலும் உள்ள ஆனாதை இல்லங்களுக்கு தன்னார்வத்துடன் சென்று சேவை செய்து வந்தனர்.

படிக்க இயலாத குழந்தைகளுக்கு அன்றைய நாளில் தெரிந்தவர்களிடம் வசூலித்து கல்வி கட்டணம் செலுத்துதல் தொடங்கி இன்று வரை அதை நேர்த்தியான முறையில், முறையான செயல்வடிவத்தோடு செய்து வருகின்றனர். இதுவரையில் சிக்ஸ்த் சென்ஸ் மூலம் உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டும். இதில் பலர் கல்வி படிப்பை முடித்த பெரிய நிறுவனங்களின் பணியிலும் இருக்கின்றனர். கல்வி உதவிகள் தவிர்த்து, சூழலியல் காக்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முன்னெடுத்தது சிக்ஸ்த் சென்ஸ்.

கல்லூரி நாட்களிலிருந்தே பாஜகவின் கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டவர்களாக வலம் வந்த இளைஞர்கள் இவர்கள். பாஜகவின் சித்தாந்தங்கள் குறித்து அப்போதே வெளி உலகிற்கு அவர்களால் முடிந்த அளவில் எடுத்து செல்ல தொடங்கினார். பின் பணி நிமித்தமாக வெவ்வேறு மாநிலங்களுக்கு இருவரும் பயணமானார்கள்.
ஆனால் இணைய உலகின் இணைப்பின் காரணமாகவும், ஒரே எண்ணவோட்டம் இருந்ததாலும் அடுத்த கட்டத்திலும் சேர்ந்தே பயணித்தனர். ஆம்! அப்படி வந்தது தான் நியுஜென் தமிழன் எனும் இணைய பத்திரிக்கையின் ஆசிரியர் குழு வாய்ப்பு. நியு ஜென் தமிழன் எனும் பத்திரிக்கை ஒரு தனிப்பட்ட சுற்றுக்கு அனுப்பப்படும் பத்திரிக்கை. இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவை இருவரும் கவனித்து வந்தனர்.

இந்த பணி குறித்து பிரதீப் அவர்கள் சொல்லும் போது “நான் இந்த பத்திரிக்கையில் பெரும்பாலும் எழுதியது பாஜகவின் ஆளுகை சார்ந்த விஷயங்களை. காரணம் நான் சூரத்தில் பணியாற்றி வந்த போது அங்கிருந்த உள்கட்டமைப்பு, அரசு சேவைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் ஒவ்வொரு நாளும் எனக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இந்த தன்னிகரற்ற ஆளுகைக்கு யார் காரணம் என பார்த்த போது குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி அவர்கள் எங்களின் முன் மாதிரியாக திகழ்ந்தார். ஆனால் சூர்யா, பாஜகவின் கொள்கை, சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டவர். கல்லூரி நாட்கள் முதலே போராட்டங்களில் கலந்து கொள்வது, தேர்தல் பிரச்சாரம் என களத்தில் இறங்கி பணியாற்றியவர். மேற்படிப்புக்காக அவர் பூனே சென்ற போது அப்போதே சமூக ஊடகத்தில் மிக துடிப்பாக பதிவுகளை பதிந்தவர்.

2014 ஆம் ஆண்டில் அவருக்கு நரேந்திர மோடி அவர்களை சந்திக்கும் வாய்ப்பும், அதை தொடர்ந்து அப்போது நடந்த தேர்தலில் சமூக ஊடக பிரிவில் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபடும் ஆர்வம் சூர்யாவுக்கு வந்தது. அவருடைய படிப்புக்கு பின் அப்போது மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் உதவியாளராக பணியில் சேர்ந்தார் சூர்யா. நான் தொடர்ந்து இந்த பத்திரிக்கைக்கு எழுதி வந்தேன்.” என்றார் அவர்.

தமிழக பாஜகவிற்கு 2016 கால கட்டத்தில் சமூக ஊடகம் என்பது புதிய களமாக இருந்தது. மேலும் சூர்யா அவர்கள் மத்தியில் பொறுப்பில் இருந்ததால், பிரதீப் அவர்களுக்கு தமிழக பாஜகவின் தலைவர்கள் அறிமுகம் கிடைக்கவே.. அவர்களுக்கான சமூக ஊடக கணக்குகளை உருவாக்குவதல், வடிவமைத்தல், நிர்வகித்தல் போன்ற பொறுப்புகள் பிரதீப் அவர்களை வந்து சேர்ந்தது.

இந்த பணிகளை எல்லாம் உன்னிப்பாக கவனித்த மேலிடம், 2016 இல் சமூக ஊடக பிரிவுக்கான குழுவை அமைக்கும் பொறுப்பை சூர்யாவிடம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து சமூக ஊடக பிரச்சார குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதை இருவரும் நிர்வகித்து வந்தனர்.

அரசியல் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக சூர்யா தமிழக பாஜகவின் இளைஞர் அணியின் துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார். பிரதீப் தன்னுடைய தனிப்பட்ட தொழில் வாழ்க்கைகாக பதவிகளிலிருந்து விலகி, கட்சி ரீதியான பணிகளை தொடர்ந்து செய்து வந்தார்.

மேலும் அந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் பணியாற்றிய போது சூர்யாவிற்கு பல்வேறு முன்னனி தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. நிர்மலா சீத்தாராமன், பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.

அதனை தொடர்ந்து ஜெயலலிதா அம்மையார் மறைந்த பின்னர், தமிழகத்தில் பாஜக பல்முனை தாக்குதலுக்கு ஆளானது. மத்தியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்கள் இங்கே கடுமையான விமர்சனங்களை சந்தித்தன. அப்போது தான் பாஜகவிற்கு என்று ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தளம் தேவை என்பதை உணர்ந்தோம்.

அந்த சிந்தனையின் ஓர் அங்கமாக தொடங்கப்பட்டது தான் கதிர். 2018 ஆம் ஆண்டில் பூஜ்ஜியம் பின் தொடர்பாளர்களுடன் தொடங்கப்பட்ட இணைய பத்திரிக்கை. இன்று இதன் வளர்ச்சி பிரம்மாண்டமானது. பேஸ்புக், டிவிட்டர், ஸ்னேப் சாட், கூ உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் 1 லட்சம் பின் தொடர்பாளர்களை தொட இருக்கிறது. இந்த பத்திரிக்கையை தற்போது 30 – 40 லட்சம் படிக்கிறார்கள், 3 கோடி ஹிட்ஸ் வரை தற்போது சாதரணமாக தொட முடிகிறது.

ஊடகத்துறையை தொடர்ந்து, சிந்தனை களம் ஒன்று வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு ரிசர்ச் பவுண்டேஷன் என்ற ஒன்றை தொடங்கினோம், இங்கே அறிவார்ந்த சிந்தனைகள், எண்ணங்கள் கருத்தரங்கங்களாக, விவதாங்களாக, ஆய்வுகளாக மேற்கொள்ளப்படும்.

இந்த அமைப்பின் மூலம் புத்தகங்கள் உள்ளிட்ட பல முன்னெடுப்புகளை வெற்றிகரமாக செய்து உள்ளனர். அன்று ஆரம்பபுள்ளியாக கதிரை தொடர்ந்து இன்று பாஜகவை ஆதரிக்கும் ஏராளமான ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன.

Click here and Join Kathir Facebook Page

சமூக ஊடகம் மற்றும் இணைய ஊடகத்தில் தமிழக பாஜகவிற்கான ஆணிவேரை அமைத்து கொடுத்ததில் பெரும் பங்களிப்பு இவர்களுடையது. அப்போது கட்சியில் தொழில்நுட்ப பிரிவு என்ற ஒன்றே இருந்திருக்கவில்லை. 2016 தேர்தலுக்கு பின் சூர்யா அவர்களின் வழிகாட்டுதலில் தொழில்நுட்ப பிரிவுக்கான ஆரம்ப புள்ளி தொடங்கப்பட்டது இன்று அது விருட்சமாக வளர்ந்து கிளை விரித்திருக்கிறது.

அரசியலின் வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறினார் சூர்யா, தன்னுடைய 20 களில் கட்சியின் இளம் செய்தி தொடர்பாளர் ஆனார், அடுத்து அண்ணாமலை அவர்கள் பதவியேற்ற பின், கட்சியின் இளம் மாநில செயலாளராக வளர்ந்திருக்கிறார். இதனை தொடர்ந்து பிரதீப் அவர்கள் தொழில்நுட்ப பிரிவுக்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சமீபத்தில் அவருக்கு தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் வாழ்வில் பீடு நடை போடும் இவர்கள் வரித்து கொண்டிருக்கும் தத்துவம் ஒன்றே ஒன்று தான், இவர்களை பொருத்தவரை அரசியல் என்பது நீடிக்கப்பட்ட ஒரு சேவை. தனிநபராக இவர்களால் பல ஆயிரம் பேருக்கு சேவை செய்ய முடியுமெனில், அரசியலில் இருப்பதன் மூலம் லட்சக்கணக்கான பேருக்கு சேவையாற்ற முடியும் என்பதை தாண்டி, ஆட்சி, அதிகாரம், பணபலம் என வேறு எந்த நோக்கமும் அற்ற சிந்தனையாளர்களாக, அரசியல் ஆளுமையாக திகழ்கிறார்கள்.

இந்த இளம் வயதில் மக்கள் நலனை தங்களின் நலனாக வரித்து வளர்ந்த இளம் தலைவர்கள்/நண்பர்கள் நம் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது நமக்கு பெருமை கலந்த மகிழ்வு. அவர்களின் பணி சிறக்க நம் வாழ்த்துகள்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group