Heroes of Aryavysyas – சுழலும் உலகை மிதிவண்டியில் சுழற்றும் ஆர்ய வைஸ்யர்

1963

வேலூர் நகரம் தேசெட்ல கோத்திரத்தை சேர்ந்தவர் திரு. பிரமோத் குமார், லண்டனில் நடைபெற்ற மிதிவண்டி போட்டியில் பங்கேற்று ஆர்ய வைஸ்யர் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 6- வருடங்களாக சைக்கிளிங் (Cycling) பயிற்சி செய்து வருகிறார் திரு.பிரமோத் அவர்கள், அவர் வேலூர்/இராணிப்பேட்டை இணைந்த ரென் சைக்கர்ஸ் (Ran Cycers) கிளப்பில் உறுப்பினராக உள்ளார்.

லண்டன் LEL போட்டி

திரு.பிரமோத் அவர்கள் லண்டன் ஆடோக்ஸ் சைக்கிளிங் கிளப் மூலம் LEL (London – Edinburgh – London) என்ற உலக அளவிலான மிதிவண்டி போட்டி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது, அதில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற LEL-2022 போட்டிக்கான தூரம் 1540 கி.மீ தூரம் மற்றும் உயர்வு தூரம் (Elevation Gain) 14500 மீட்டர்கள், போட்டிக்கான தூரத்தை 128 மணி நேரம் 40 நிமிடங்கள் கடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் குறிபிட்ட தூரத்தை கடப்பவர்கள் அனைவருமே போட்டி வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தான்.

இந்த ஆண்டு நடைபெற்ற LEL-2002 மற்ற ஆண்டுகளில் நடைபெற்ற LEL போட்டிகளை விட மிகவும் கடினமாகவே இருந்தது.

பிரமோத் குமாரின் சாதனை

உலகம் முழுவதிலும் இருந்து 1600-க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றிருந்தாலும் பந்தைய தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடந்து வெற்றி பெற்றவர்கள் 920 பேர் மட்டுமே.

இதில் 52 இந்தியர்கள் அடங்குவர். போட்டியில் பங்குபெற்ற 40 தமிழ்நாட்டு வீரர்களில் அதிலும் 11 தமிழ்நாட்டு வீரர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அதில் மணிமகுடமாக திகழும் நமது ஆர்ய வைஸ்யரான திரு.பிரமோத்குமார் அவர்கள் போட்டிக்கான தூரத்தை 3 மணி நேரம் முன்பாகவே அதாவது 1540 கி.மீ தூரத்தை 125 மணி நேரத்தில் கடந்து போட்டியில் அசாத்திய வெற்றி பெற்றுள்ளார் என்றால் அது மிகையாகாது.

போட்டிக்கான பதாகையுடன் திரு.பிரமோத்குமார் அவர்கள்.

ஆர்ய வைஸ்யர்கள் உடல் வலிமை குன்றியவர்கள் என்று நம் குல பெரியவர்களே சிலர் பேசி வரும் சூழ்நிலையில் அவற்றை எல்லாம் பொய்யாக்கும் விதமாக ஆர்ய வைஸ்யர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ளார், 47 வயதான நம் ஆர்ய வைஸ்யர் திரு.பிரமோத் குமார் அவர்கள்.

அவருக்கு நம் ஆர்ய வைஸ்யர்கள் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொள்வோம்.

திரு.பிரமோத்குமார் அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க:

Mr. C.S. Pramod Kumar
கோத்திரம்: DESATLA
SREE LAKSHMI JEWELLERY
426, MAIN BAZAAR,Vellore – 4
+91-9344421664

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group