Heroes of Aryavysyas | ஆர்ய வைஸ்ய தற்காப்பு கலைஞர் – திரு. நாகேந்திரன்

1661

இன்று செப்டம்பர் 14, தற்காப்பு கலையின் தாயும் அனைத்து தற்காப்பு கலைகளுக்கும் அடிப்படை கலையான அடிமுறை தினம் இன்று, அதாவது உலக அடிமுறை தினம், இன்னாளில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் ஒரு ஆர்ய வைஸ்யரை பற்றி அறிந்து கொள்வோம்.

தற்காப்பு கலைகள்

தற்காப்பு கலைகள் அல்லது சண்டைக் கலைகள் (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். இதன் இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றை விடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு.

சில தற்காப்புக் கலைகளின் வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல தற்காப்புக் கலைகள் தற்காப்பு விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. தற்காப்புக் கலையில் ஈடுபடுபவர் தற்காப்புக் கலைஞர் எனப்படுவர்.

திரு. நாகேந்திரன் எனும் தற்காப்பு கலைஞர்

திரு.நாகேந்திரன் அவர்கள் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர், சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சின்னிசெட்ல கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் தந்தை திரு.ஜெயராமன் மற்றும் தாயார் திருமதி.ஸ்ரீமதி அவர்களுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.

தன்னுடைய 10 வயதிலேயே கராத்தே எனும் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

தொடர்ந்து 26 வருடங்களாக கராத்தே எனும் தற்காப்பு கலையை கற்று தற்போது பிளாக் -2 டான் (Black Belt 2 Dan) பட்டத்தை பெற்றுள்ளார். இது எளிதான காரியம் அல்ல, அதற்காக கராத்தே கலையின் அடிப்படைகளை அறிய வேண்டும்.

கராத்தே படிகள்

முதலில் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை,
நீலம், பர்ப்பிள் 1, பர்ப்பிள் 2, பிரவுன் 1, பிரவுன் 2, அதற்கு பிறகு பிளாக் பெல்ட் (Black Belt), அதன்பிறகே பிளாக் பெல்ட் டான் 1 (Black belt Dan 1), பிளாக் பெல்ட் (Black belt Dan 2). இது போன்று கராத்தே படிகள் அமைந்துள்ளன.

கராத்தே தற்காப்பு கலையில் படிநிலைகளை காட்டும் ஏடு

பிளாக் பெல்ட் 2 டான்

கராத்தே தற்காப்பு கலையில் கருப்பு நிற பெல்ட்டை பெறுவதே கடினம், அதையும் தாண்டி கருப்பு பெல்ட் 1 டான் மற்றும் கருப்பு பெல்ட் 2 டான் பெறுவது மிக கடினம். இத்தகைய கருப்பு பெல்ட் 2 டான் தகுதியை அடைந்த ஆர்ய வைஸ்யர்கள் ஓரிருவர்களில் இவரும் ஒருவர்.

தற்போது தனியார் நிறுவனத்தில் மென்பொருள் ஊழியராக பணிபுரியும் இவர் தாம்பரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்ட ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஆர்ய வைஸ்ய சமுகத்திற்காக சேவை செய்தும் வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆர்ய வைஸ்ய மகாசபா விரைவில் நடத்த இருக்கின்ற (Future Plan) உடலினை உறுதி செய் திட்டத்திற்கு திட்ட தலைவராக இருந்து ஆர்ய வைஸ்ய சமுகத்தில் சிறந்த கராத்தே குழந்தைகளை உருவாக்க தயாராக உள்ளார்.

உடலின் முக்கியத்துவத்தை அறிந்து அதை போற்றி தற்போது கராத்தே மாஸ்டராக உருவெடுத்துள்ள இந்த ஆர்ய வைஸ்யரை வாழ்த்துவோம்.

உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க – திரு.நாகேந்திரன்
+919962583215

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group