விடுதலைப் போராட்ட வீரர் சேலம் ஆதி நாராயண செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்

தமிழகத்தைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர்கள் நம் நாட்டின் சுதந்திரப்போராட்டத்திலும் கலந்து கொண்டு சாதனைகள் செய்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது.

சேலம் ஆதிநாராயண செட்டியார் இராஜாஜியின் வலதுகரமாகத் திகழ்ந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் பல போராட்டங்களில் கலந்து கொண்டார். பல காங்கிரஸ் மாநாடுகளை திறம்பட நடத்தினார், சேலம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வு வளம்பெற பல பணிகளையும் இவர் மேற்கொண்டார் என அறியும் போது நம் மனம் மேலும் மகிழ்ச்சிகொள்வதில் வியப்பில்லை.

இவர் மகாத்மா காந்தியின் அன்பை பரிபூர்ணமாகப் பெற்றவர். பன்முகத் திறமையாளாராகவும் இவர் திகழ்ந்தார். இவரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 1879ஆம் ஆண்டு செல்வந்தர் பட்டாபிராமன் செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார்.

சென்னை கிருத்துவ கல்லூரியில் பட்டப்படிப்பையும், பின்னர் அயர்லாந்திலும், லண்டனிலும் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

1918ல் சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவுசெய்து கொண்ட இவர், தன் வாழ்நாள் முழுவதும் கதராடை அணிந்து கொண்டு சுதந்திர போராட்டத்திற்கும், சேலம் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கும் பாடுபட்டார்.

சேலத்தில் இவர் வீட்டிற்கு வருகை புரிந்த மகாத்மாகாந்தி இவரின் மகளுக்கு சரோஜினி என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

இராஜாஜியின் உற்ற நண்பராகத் திகழ்ந்த இவரைப்பற்றி ஜெயில் டைரி எனும் நூலில் இராஜாஜி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார்.

ரெளலட் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்திலும், சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டத்திலும் முன்னிலை வகித்து கலந்து கொண்டார்.

சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டத்தில்

1923 லிருந்து 1929 வரை இவர் தமிழக சட்டசபை மேலவையில் வட ஆற்காடு மாவட்டத்தின் பிரிதிநிதியாக அங்கம் வகித்து சிறப்பாகப் பணியாற்றினார்.

விவசாயிகளின் வாழ்வு நலம் பெற 1906 ஆம் ஆண்டு சேலம் மத்திய கூட்டுறவு வங்கியை நிறுவினார். நாமக்கல் போன்ற பகுதிகளில் கூட்டுறவு இயக்கங்களை ஆரம்பித்தவரும் இவரே.

Rural Life என்கிற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் திகழ்ந்தார். சேலம் மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்று கூட இவரை சேலம் மாவட்ட மக்கள் பாராட்டுகின்றனர்.

தன் செல்வத்தையெல்லாம் சுதந்திர போராட்டத்திற்காகவே செலவழித்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பரான கணித மேதை இராமானுஜன் தன் இளமைக்காலத்தில் நோய்வாய்ப்பட்ட போது தனது மயிலாப்பூர் இல்லத்தில் தங்கவைத்து மருத்துவ உதவிபெற பெருதும் உதவினார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்த தேசபக்தியாளர் 1937ஆம் ஆண்டு மறைந்தார்.

இவரைப்பற்றி விரிவாக உடுமலைப்பேட்டை திரு. அமிர்தநேயன் அவர்கள் ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார்.

இன்னொரு கூடுதலான தகவல் இன்று உலகிலுள்ள ஜீரணத்துறை மருத்துவர்களில் சிறந்தவராகத் திகழ்பவரும் பல விருதுகளுக்கு சொந்தக்காரரும், இனிய தமிழில் இனிமையாக அனைவரையும் தன்வசப்படுத்தும் வண்ணம் பேசக்கூடிய சாதனையாளரும், புகழ்பெற்ற கோயமுத்தூர் டாக்டர் வி.ஜி.மோகன்பிரசாத் அவர்களின் தாய்வழிப்பாட்டனார்தான் இவர் என்பதை அறியும் போது நமக்கு பலமடங்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா? புலிக்கு பிறந்தது பூனையாகுமா?என்கிற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

சாதனை நாயகனும், விடுதலைப்போராட்ட வீரருமான ஆதிநாராயணச் செட்டியாரை பற்றிய தகவல்களை தந்து உதவிய அவருடைய பேத்தி சேலம் திருமதி. ஜெய ஸ்ரீ ஆதி கேசவன் அவர்களுக்கும், கொள்ளுப் பேரன் திரு. நிர்மல் குமார் அவர்களுக்கும்,அவர்களை தொடர்புகொண்டும் மேலும் பல செய்திகளை சேகரிக்க உதவிய சேலம் திரு. ப.சு.மு. துவாராகநாதன் (Retd KVB manager,) அவர்களுக்கும் நன்றி.

பல வைஸ்ய குல ஆளுமைகளை பற்றி ஆராய்ந்து நம் அனைவருடனும் எளிய நடையில் பகிர்ந்து, நம் இனத்திற்கு பெருமை சேர்க்கும் தமிழ் அறிஞர் பண்ருட்டி திரு. சொ.முத்துக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

1 COMMENT